என் மலர்
மேஷம்
2024 புரட்டாசி மாத ராசிபலன்
உதவும் குணத்தால் உள்ளத்தில் இடம்பிடித்த மேஷ ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனாதிபதி சுக்ரன் நீச்சம் பெற்றிருந்தாலும், குருவின் பார்வை மற்றும் பரிவர்த்தனை கிரகத்தின் சேர்க்கை ஆகியவற்றால் அவர் நீச்சபங்கம் அடைகிறார்.
எனவே பொருளாதாரம், குடும்பம், உடல்நிலை, உத்தியோகம், தொழில் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமின்றி உங்கள் எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். லாப ஸ்தானத்தில் உள்ள சனி, வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஒரு சில சமயங்களில் பணத் தட்டுப்பாடு வரலாம். அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் ஸ்தானாதிபதியான அவர் வக்ர இயக்கத்தில் இருப்பதால், தொழில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
முக்கியப் பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது, உங்கள் மேற்பார்வை அவசியம் தேவை. ஒரு சில பயணங்களில் தடைகள் ஏற்பட்டாலும், எதிர்பாராத சில பயணங்கள் உங் களுக்கு லாபத்தைத் தேடித் தரும்.
புதன் உச்சம்
புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். ஜீவன ஸ்தானத்தில் அவர் உச்சம் பெறும் இந்த நேரம், தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உயர்பதவி, ஊதிய உயர்வு கிடைக்கும்.
அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இதுநாள் வரை பலமுறை பஞ்சாயத்து செய்தும் முடிவுக்கு வராத பாகப்பிரிவினை, இப்போது முடிவடையும். தொழிலை விரிவு செய்வதற்காக, கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும்.
துலாம் - சுக்ரன்
புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். சப்தம ஸ்தானத்தில் சுக்ரன் பலம்பெற்றிருக்கும் இந்த நேரம், உங்களுக்கு பொன்னான நேரமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.
வரன்கள் வாசல் தேடி வந்து மகிழ்ச்சியைத் தரும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெற வழிபிறக்கும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு, இப்பொழுது வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்துசேரும். அடகு வைத்த நகைகளை மீட்டு வந்து அழகு பார்ப்பீர்கள்.
துலாம் - புதன்
புரட்டாசி 20-ந்தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அங்கு சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதார நிலை உச்சம்பெறும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறை வேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து, தேவையான சலுகை களைப் பெறுவர்.
வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்பு கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். எடுத்த முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு மேலோங்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய உதவி கிடைக்கும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு சாதகமான நேரம் இது. மாணவ - மாணவி களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் கூடும். சுபச்செய்திகள் வந்துசேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
செப்டம்பர்: 17, 18, 22, 27, 28, அக்டோபர்: 9, 10, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.