என் மலர்
மேஷம்
வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை
தொழில் முன்னேற்றம் நிறைந்த வாரம். ராசிக்கு 10, 11-ம் அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தி பெறுகிறார். கடின உழைப்பும், விடா முயற்சியும் அனுகூலமான பலன் தரும். வைராக்கியத்துடன் தடைகளை கடந்து வெற்றி வாகை சூடுவீர்கள். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊர் விட்டு ஊர் மாற நேரும். ஒரு சிலர் நாடு விட்டு நாடும் மாறலாம். விரும்பிய பதவி உயர்வு தேடி வரும். பணிச் சுமை கூடும்.
விரும்பிய அப்பார்ட்மென்டில் சொந்த வீடு கிடைக்கும். விண்ணப்பித்த வீட்டு, வாகன கடன் இந்த வாரத்திற்குள் கிடைத்துவிடும். திருமண முயற்சி கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சனிபகவான் 12-ம் இடமான விரய ஸ்தானத்தை நோக்கி நகர்கிறார். மார்ச் 29-ல் ஏழரைச் சனி ஆரம்பமாகிறது என்பதால் முக்கிய பணிகளில் கவனம் செலுத்தவும். பவுர்ணமி அன்று அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்ளவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி செல்: 98652 20406