என் மலர்
மேஷம்
வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை
அமைதி நிறைந்த வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் நீசம் பெற்று ராசியை பார்க்கிறார். நீசம் அடைந்தாலும் சூரியன் ராசியை பார்ப்பது மேஷத்திற்கு நன்மை தரும் அமைப்பாகும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறுசிறு புதுமைகள் ஏற்படும். மனதில் நல்ல எண்ணங்களை உதயமாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். மனதில் ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும்.
தீபாவளி செலவிற்கு தேவையான பணம் தாராளமாக கிடைக்கும். சொத்து விற்பனை மற்றும் சொ்தது வாங்குவதில் லாபம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். மார்ச் 29, 2025-ல் ஏழரைச் சனி ஆரம்பமாவதால் முக்கிய பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. திருமணம், குழந்தை பேறில் நிலவிய சங்கடங்கள் சீராகும். பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406