search icon
என் மலர்tooltip icon

    மேஷம்

    12.01.2025 முதல் 18.01.2025 வரை

    நன்மைகள் மிகுந்த வளமான வாரம். ராசி அதிபதி செவ்வாய்க்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனின் பார்வை. இது மேஷ ராசிக்கு வளமான வாரம் என்றால் அது மிகையாகாது. தொழில் ரீதியாக உறவுகள் ரீதியாகவும் அனுபவித்த மன சங்கடங்கள் விலகும். பொருளாதார நிலையில் மிக உன்னதமான நிலையை அடைவீர்கள். கடனால் பட்ட கவலைகள், அவமானம் அகலும். அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

    பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இது மேன்மையான காலம். குடும்பத்திற்கு குல தெய்வ அருள் கிடைக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் தலை தூக்கினாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகும்.

    திருமணம், கல்வி, புத்திரப் பேறு, உத்தியோகம், தொழில் போன்ற சுப பலன்கள் அதிகரிக்கும். அதற்கான சுப விரயங்களும் உண்டாகும். சிறு சிறு உட்பூசலுக்காக வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும். வெகு விரைவில் ஏழரைச் சனி துவங்க உள்ளதால் தொழில், வேலை தொடர்பாக முக்கிய முடிவுகளை சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு செயல்படுத்துவது நல்லது. பவுர்ணமியன்று முருகனை வழிபடவும்.


    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×