என் மலர்
மேஷம்
வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை
27.10.2024 முதல் 3.11.2024 வரை
எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். தன ஸ்தானத்தில் நிற்கும் குருபகவான் வக்ர கதியில் சஞ்சாரம் செய்தாலும் தனாதிபதி சுக்ரன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் கடின உழைப்பு லாபத்தை ஈட்டித்தரும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அதிர்ஷ்டம் அரவணைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். சிலர் உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறலாம். இளம் வயதினருக்கு திருமண முயற்சிகள் வெற்றி தரும்.ஸ்திர சொத்துக்கள் சேரும்.
குடும்ப உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் சீராகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நன்மைகளே மிகுதியாக நடக்கும், எனினும் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. தீபாவளி விடுமுறை குதூகலத்தை அதிகரிக்கும்.2.11.2024 இரவு 11.23க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் இனம்புரியாத கவலை குழப்பம் உண்டாகலாம். வேலையாட்களால், உடன் பணிபுரிபவர்களால் மன சங்கடம் ஏற்படலாம்.எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406