என் மலர்
மேஷம்
வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)
29.9.2024 முதல் 5.10.2024 வரை
விடா முயற்சிகள் வெற்றி தரும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த காரியங்கள் கூட துரித வேகத்தில் நடந்து முடியும். உழைப்பிற் கேற்ற ஊதியம் கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும்.ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலம். புதிய தொழில் வாய்ப்புகள், முயற்சிகள் மன நிறைவு தரும். அரசு வேலை வாய்ப்பு உறுதி. நீண்ட காலமாக விற்க முடியாத சொத்துக்கள் விற்பனை யாகும். காணாமல் போன ஆவணங்கள், கை மறதியாக வைத்த விலை உயர்ந்த பொருள்கள் கிடைக்கும்.
விரும்பிய கடன் தொகை, பண உதவி நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்.வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். இல்லத்து விசேஷங்களுக்கு பாராமுகம் காட்டிய உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும். காதலர்கள் பெற்றோரின் நல்லாசியுடன் திருமணம் செய்வது உத்தமம். சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தோன்றும். மகாளய அமாவாசையன்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406