என் மலர்
மேஷம்
வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை
3.11.2024 முதல் 9.11.2024 வரை
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். 3, 6-ம் அதிபதி புதன் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கிறார். புதிய வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும்.சிலர் நிலையான நிரந்தரமான தொழில், உத்தியோகத்திற்காக வீடு அல்லது ஊர் மாற்றலாம். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதம் நீங்கும். நோய் தாக்கம் குறையும். போட்டிகள், பொறாமை, சங்கடங்கள் உள்ளிட்ட சாதகமற்ற விஷயங்கள் படிப்படியாக குறையும். வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணம் சிறக்கும்.
மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பார்கள். நல்ல வசதியான வாடகை வீட்டிற்கு இடம் பெயரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பும் பூமி சகாய விலைக்கு கிடைக்கும். அரசியல் பிரமுகர்கள், அரசாங்க ஊழியர்கள் வம்பு, வழக்கு, சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும். சில இளவயதினர் காதல் வயப்படுவார்கள். திருமணம் கைகூடும். சிலருக்கு வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 5.11.2024 அன்று காலை 9.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சமயபுர மாரியம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406