search icon
என் மலர்tooltip icon

    மேஷம்

    வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை

    5.1.2025 முதல் 11.1.2025 வரை

    இடப்பெயர்ச்சி உண்டாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் 3,6-ம் அதிபதி புதனுடன் பாக்கிய ஸ்தானத்தில் சேருவது புத ஆதித்யயோகம். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம். பொருளாதாரத்தைப் பொறுத்த வரை இல்லை என்ற நிலை உங்களுக்கு இல்லை. நீண்ட நாட்களாக தாமதித்த காரியங்கள் துரிதமாக நடைபெறும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குறிப்பாக தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தீய பழக்கம் மற்றும் நட்புகளிடம் இருந்து விடுபடுவது வாழ்க்கையை வளமாக்கும்.

    கோட்சார சனி விரய ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம், படிப்பு, நகை வாங்குவது என விரயத்தை சுபச் செலவாக முதலீடாக மாற்றுவது நல்லது. ஆரோக்கியம் அதிகரிக்கும். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும். வள்ளலார் வழிபாடு செய்வது நல்லது.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×