என் மலர்
மேஷம்
வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை
6.10.2024 முதல் 12.10.2024 வரை
கடன் பிரச்சனைகள் குறையத் துவங்கும் வாரம்.வார இறுதியில் 6-ம் அதிபதி புதன் உச்ச நிவர்த்தி பெறுகிறார். உச்சம் பெற்ற புதனால் கடந்த சில நாட்களாக கடன் தொல்லை, நோய் தாக்கம் மன உளைச்சலை தந்து இருக்கலாம். உத்தியோக ரீதியான மறைமுக எதிர்ப்புகளை சந்தித்து இருக்கலாம். தற்போது விரய அதிபதி குருவும் வக்ர கதியில் செல்வதால் கடன் சார்ந்த பயம் டென்ஷன் விலக ஆரம்பிக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். பணி நிமித்தமான புதிய முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும்.
வெளி வட்டாரங்களில் மதிப்பு உயரும். வியாபார இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உயர் கல்விகளில் இருந்துவந்த குழப்பம் குறையும்.சொந்த ஊருக்கு சென்று வருவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சி நிறைவேறும். புத்திரப் பிராப்த்தம் உண்டா கும். 6.10.2024 மாலை 5.33 மணி முதல் 9.10.2024 அதிகாலை 4.08 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. முன்கோபத்தை குறைத்து பொறுமையைக் கடைபிடித்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். காளியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406