search icon
என் மலர்tooltip icon

    கடகம்

    வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை

    5.1.2025 முதல் 11.1.2025 வரை

    அனுகூலமான வாரம்.ராசியில் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்ற வக்ர செவ்வாய். மற்றும் ராசிக்கு 6ல் சூரியன் புதன், சேர்க்கை ஏற்பட்டுள்ளது. எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும்.விரைவில் அஷ்டமச் சனி முடியப் போகிறது. சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும்.புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.

    பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பீர்கள். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும்.5.1.2025 அன்று மதியம் 2.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் காரியத்தடையால் மன சஞ்சலம் அதிகரிக்கும். தினமும் சரபேஸ்வரரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×