என் மலர்
மீனம்
வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை
1.12.2024 முதல் 7.12.2024 வரை
வாழ்க்கையில் புதிய நம்பிக்கை பிறக்கும். சனி பகவான் ராசியை நோக்கி முன்னேறி வருவதால் எதிர்காலம் பற்றிய நல்ல சிந்தனைகள் உண்டாகும். கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சினைகள் பனி போல் விலகும். தொழில் தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறும். எதிரிகளால் உண்டாகிய தொல்லைகள் விலகும். தொழில் ரீதியாக சந்தித்த பாதிப்புகள், உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் மங்கள ஓசையும், மழலை குரலும் ஒலிக்கப் போகிறது.
பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாவதுடன் பூர்வீகச் சொத்துக்களும் உங்கள் கைக்கு வந்து சேரும். எந்த செயலையும் பல முறை யோசித்து செயல்பட விரயத்தை சுபமாக்க முடியும். சிலருக்கு சிறு சிறு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம். பெண்கள் நண்பிகள் மற்றும் உறவுகளுக்கு தங்க நகைகளை இரவல் கொடுக்க கூடாது. அக்கம் பக்கத்தினரின் தீய பார்வையால் ஆரோக்கியம் குறையும். உப்பு, மிளகாய் சுற்றிப் போடுவது நல்லது. சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406