search icon
என் மலர்tooltip icon

    மீனம்

    12.01.2025 முதல் 18.01.2025 வரை

    கெட்டவன், கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். மீன ராசிக்கு 3,8-ம் அதிபதியான சுக்ரன் மற்றொரு மறைவு ஸ்தானமான 12-ம்மிடத்தில் விரயாதிபதி சனியுடன் சேர்க்கை பெறுகிறார். கடந்த கால நெருக்கடிகள் குறையத் துவங்கும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மறைமுக ஆதாயம் உண்டாகும். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். மனைவி, பிள்ளைகளுக்கு தங்க நகைகள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.

    திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் அனுகூலமாகும். வீடு கட்ட வாகனம் வாங்க உகந்த நேரம். உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் நேரம். பெண்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். விரோதமாக இருந்தவர்கள் கூட அன்பாக பேசுவார்கள். பண்டிகை கால விடுமுறையை திட்டமிடுவீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நோய்த் தாக்கம் குறையும். சிலர் தவறான நட்பு வலையில் மாட்டலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வது வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×