என் மலர்
தனுசு
2024 மார்கழி மாத ராசிபலன்
நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தனுசு ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு 6-ம் இடத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். செவ்வாய் 8-ம் இடத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய மாதம் இது.
பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும் மன நிம்மதி குறைவாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் திடீர் தாக்குதலும், உற்சாக குறைபாடும் ஏற்படும். சொத்துகளால் திடீர் பிரச்சினை வரலாம். ஒரு சிலருக்கு புதிய வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
செவ்வாய் - சுக்ரன் பார்வை
மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். சுக்ரன், கும்பத்திற்குச் சென்றபிறகும் செவ்வாயின் பார்வை அவர் மீது பதிகிறது. உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், சுக்ரனைப் பார்வை செய்யும் காலகட்டத்தில் நல்ல மாற்றங்கள் இல்லம் தேடிவரும். கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும். இனி கைக்கு வராது என்று நினைத்த தொகை கூட வசூலாகக்கூடும்.
உத்தியோகத்தில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி இடமாற்றம் ஏற்படும். நீண்ட தூரங்களில் உள்ள நிறுவனங்களில் இருந்து சம்பள உயர்வுடன் கூடிய வேலைவாய்ப்புகள் வரலாம். திசாபுத்தி பலம் பெற்றிருந்தால் நம்பிக்கையோடு செல்லலாம். இல்லையேல் இருக்கும் இடத்திலேயே இருப்பது நல்லது.
குரு வக்ரம்
உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு பகவான். சுகாதிபதியான குரு பகவான் வக்ரம் பெறுவதால், ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தை பொறுத்தவரை மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
ஒரு சிலருக்கு வாங்கிப் போட்ட இடத்தாலும், விற்பனை செய்த இடத்தாலும் பிரச்சினை உருவாகலாம். நண்பர்களை நம்பி செய்த காரியம் பாதியிலேயே நிற்கலாம். கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.
கும்ப - சுக்ரன்
மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சகாய ஸ்தானத்திற்கு செல்லும் வேளையில் வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். 'விருப்ப ஓய்வில் வெளிவந்து சுய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள்.
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாட்டிற்கு பணிபுரிய சென்று வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு, இப்பொழுது வேலை கிடைக்கும். பகை பாராட்டி வந்தவர்கள் சிலர், நட்பாக மாறுவர்.
தனுசு - புதன்
மார்கழி 17-ந் தேதி, உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசிக்கு வரும் பொழுது கல்யாண முயற்சிகள் கைகூடும். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சி அடையச் செய்யும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வளர்ச்சி அதிகரிக்கும் நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கனவுகள் நனவாகலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிகளை தாண்டி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு வருமானம் திருப்தி தரும். மாணவ - மாணவிகளுக்கு போட்டிகளில் வெற்றி உண்டு. பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிக செலவுகள் ஏற்படலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 21, 22, 26, 27, ஜனவரி: 2, 3, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.