search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    ஆடி மாத ராசிபலன்

    சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் காட்டும் தனுசு ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாயும் இணைந்திருக்கிறார். எனவே தொழில் வளர்ச்சி திருப்தி கரமாக இருக்கும். பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். சுப விரயங்கள் அதிகரிக்கும். இடமாற்றம், வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.

    குரு - செவ்வாய் சேர்க்கை

    மாதத் தொடக்கத்திலேயே குருவும், செவ்வாயும் இணைந்து, உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. குரு பகவான் இருக்கும் இடம் மறைவிடமாக இருந்தாலும், பார்க்கும் இடத்திற்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த அடிப்படையில் வருமானம் திருப்தி தரும். தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். விரயங்கள் ஏற்பட்டாலும் அவை சுபவிரயமாகவே அமையும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, பிள்ளை களின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

    புதன்-வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவது நன்மைதான். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்பு கைகூடிவரும். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு. எனவே பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படாது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். தந்தை வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகம் சம்பந்தமான நல்ல அழைப்புகள் வரலாம். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைந்து செயல்பட முன்வருவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்கள், பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய முதலீடுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். கலைஞர்களுக்கு கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகள், படிப்பில் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு குடும்ப பொறுப்புகள் கூடும். செலவுகள் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 22, 23, 26, 27, ஆகஸ்டு: 6, 7, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    ×