search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    ஆனி மாத ராசிபலன்

    நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தனுசு ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். சகாய ஸ்தானத்தில் சனியும், சப்தம ஸ்தானத்தில் புதனும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாயும் அவரவர் சொந்த வீடுகளில் சஞ்சரிப்பதால் ஏற்றங்களும், நல்ல மாற்றங்களும் வந்துசேரும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். பொருளாதார நிலை உயரும். புதிய பாதை புலப்படும். குருவின் பார்வை பலத்தால் குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

    சனி வக்ரம்

    ஆனி மாதம் 5-ந் தேதி கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு தனாதி பதியாகவும், சகாய ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செய்வதன் மூலம் நன்மைகளை அடையலாம். வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். சகோதர வர்க்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு நீண்ட தூரத்திற்கான இடமாறுதல் வரலாம். பிள்ளைகளின் கல்யாணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதற்கான முயற்சியில் தடைகள் ஏற்படலாம். இக்காலத்தில் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனிக் கவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது.

    கடக - புதன்

    ஆனி 12-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற புதன், அஷ்டமத்தில் மறையும் இந்த நேரம் நல்ல நேரம்தான். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்தை வளப்படுத்த எடுத்த முயற்சி வெற்றி தரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பாக்கிகள் வசூலாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்விக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை மேலதிகாரிகள் உங்களுக்கு நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர்.

    கடக - சுக்ரன்

    ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி 8-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும். உங்கள் ராசிநாதன் குருவிற்கு, சுக்ரன் பகை கிரகம் ஆவார். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கு ஏற்ப எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உருவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது போன்றவற்றிற்காக கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அதுவும் கைகூடும்.

    ரிஷப - செவ்வாய்

    ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ - புண்ணிய ஸ்தானாதிபதி 6-ல் மறைவது அவ்வளவு நல்லதல்ல. உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. ஊர் மாற்றம் திருப்தி கரமாக அமையாது. குடும்பத்திலும் சில பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியத் தொல்லைகளும், மருத் துவச் செலவுகளும் கூடும். பண நெருக்கடியின் காரணமாக ஒரு சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம்.

    பொதுவாழ்வில் உள்ளவர் களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்கு எதிர்பார்த்த இலக்கை அடைய, ஆசிரியர்கள் வழிகாட்டுவர். பெண்களுக்குப் பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். தேவைக்கேற்ற விதத்தில் பொருளாதாரம் உயரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூன்: 17, 18, 25, 26, 29, 30, ஜூலை: 10, 11, 14, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    ×