என் மலர்
தனுசு
மாசிமாத ராசிபலன்
எல்லோரிடமும் இனிமையாகப் பேசும் தனுசு ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியையே பார்க்கிறார். நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குருவின் பார்வை பதிவதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும் மாதமிது. பஞ்சம- விரயாதிபதியான செவ் வாய் உச்சம் பெற்று லாபாதிபதி சுக்ரனுடன் இணைந்திருப்பதால் வருமானம் திருப்தி தரும்.
கும்பம்-புதன்
மாதத் தொடக்கத்தில் கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். அவர் பாக்கியாதிபதி சூரியனோடு இணைந்து `புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி, கலைத்துறை சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். வருமானம் உயர புது யுக்திகளை கையாளுவீர்கள். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு கிடைக்கும். பழைய வாகனங்கள் பழுதாவதை முன்னிட்டு புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.
மகரம்-சுக்ரன்
மாதத்தின் முதல் நாள் மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடம், பூமி விற்பனையில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நேரமிது. புண்ணிய தலங்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.
மீனம்-புதன்
மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவது நன்மை தான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறும் பொழுது யோகம் செய்யும். எனவே கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். கடை திறப்பு விழா, கட்டிட திறப்பு விழாக்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. புது முயற்சிகளுக்கு நண்பர்கள் உறு துணையாக இருப்பர். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நெருக்கடி நிலை மாறும்.
கும்பம் சுக்ரன்
மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். லாபாதிபதி சுக்ரன் சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். வருமானம் உயரும். வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தர்ம சிந்தனை அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்களால் நன்மை கிடைக்கும். பெண் வழிப்பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முன்வருவீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ, மாணவியர் நல்ல நட்பை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 13, 14, 24, 25,
மார்ச்: 1, 2, 8, 9, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.