என் மலர்
விருச்சகம்
வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை
15.12.2024 முதல் 21.12.2024 வரை
அதிர்ஷ்டமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜ யோக நிலையில் சஞ்சரிக்கிறார்.ராசியில் 8,11ம் அதிபதி புதன்.கசந்த காலங்கள் இனி வசந்த காலமாக மாறப்போகிறது. அதிர்ஷ்டம் அரவணைக்கும். அனைத்து நெருக்கடிகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். விபரீத ராஜ யோகம் கை கூடி வரப்போகிறது. அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கையில் பணம் தாராளமாக புழங்கும்.
வேலையில் இருந்த சிரமங்கள் குறையும். எதிர்பார்த்ததை விட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் பெற்றோருக்குப் பெருமை உண்டாகும். குடும்பத்துடன் வெளியிடங்க ளுக்குச் சென்று வருவீர்கள்.15.12.2024 அன்று மாலை 3.04 மணி முதல் 17.12. 2024 மாலை 6.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடன் பணிபுரி பவர்களை அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள்.சனிக்கிழமை ஆதரவற்றவர்களுக்கு உணவு தானம் வழங்க மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406