search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    வார ராசிபலன் 29.12.2024 முதல் 4.1.2025 வரை

    29.12.2024 முதல் 4.1.2025 வரை

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய வாரம்.ராசியில் உள்ள அஷ்டமாதிபதி புதன் வார இறுதியில் தன ஸ்தானம் செல்கிறார். புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பள்ளி கல்லூரிகள் மூலம் படிப்பு சம்பந்தமான சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நிலவிய பனிப் போர் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள்.

    நான்காமிடமான சுக ஸ்தானத்தில் சனி, சுக்ரன் இணைந்து நிற்பதால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும். வீடு, வாகனம் தொடர்பான முயற்சியில் ஈடுபட உகந்த நேரம். உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். அலைச்சல் மிகுதியாகும். அர்தாஷ்டமச் சனியால் பட்ட கஷ்டங்கள் குறையத் துவங்கும். பெண்களுக்கு தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆஞ்சநேயருக்கு அமாவாசையன்று துளசி சாற்றி வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×