என் மலர்
விருச்சகம்
வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை
3.11.2024 முதல் 9.11.2024 வரை
தொட்டது துலங்கும் வாரம் .ராசி அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் .மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் நிலை மாறும். குழந்தைகள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.திருமணத்தடை அகலும். இரண்டாவது குழந்தை பிறக்கும்.
பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை, பிறந்த வீட்டு சீர் என மகிழ்ச்சியான விசயங்கள் நடந்து மகிழ்விக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடு அகலும். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் கருத்துக்களை மதித்து நடப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும்.வீர பத்திரரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406