என் மலர்
விருச்சகம்
வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை
5.1.2025 முதல் 11.1.2025 வரை
தடைகள் விலகும் வாரம்.தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூரியன் புதன் சேர்க்கை. சுக ஸ்தானத்தில் சனி, சுக்ரன் சேர்க்கை என கிரக நிலவரம் சுபமாக உள்ளது.தொழில் முயற்சிகள் நிறைவேறும். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும்.வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும்.வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.
கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். மறுமணம் கைகூடும். பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும்.சனிக்கிழமை முன்னோர்களை வழிபட அனைத்தும் நற்பலன்க ளும் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406