search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    வார ராசிபலன்

    25.9.2023 முதல் 1.10.2023 வரை

    லாபகரமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில், தொழில் ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தான அதிபதி புதனுடன் பரிவர்த்தனை என லாப ஸ்தானம் பலம் பெறுவதால் எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத நோயிலிருந்து விடுபடுவீர்கள். பகையை, பகைவர்களை வெல்லக் கூடிய ஆற்றல் உருவாகும். எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள். இதுவரை நீங்கள் பெற்ற கடனை அடைக்க முடியாமல் திணறி கடன்காரர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த நிலைமாறும். கடன் பெறுவதற்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகி அலுத்துப் போன உங்களுக்கு கடன் தர நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வீடு தேடி வரும். வீட்டின் சுப நிகழ்வுகளை நடத்த, தொழில் விரிவாக்க கடன், ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் என விரும்பிய கடன் தொகை கிடைக்கும். புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்க ளுக்கு திறமைக்கும், தகுதிக்கும் பொருத்தமான வேலை கிடைக்கும் 40 வயதைக் கடந்தும் திருமண மாகாத பல ஆண்கள், பெண்களுக்கும் திருமணம் நடக்கும்.புத்திரப்பேறு உண்டாகும். மகாளய பட்ச காலத்தில் ஊன முற்றவர்களின் தேவையறிந்து உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×