search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    2024 ஆவணி மாத ராசிபலன்

    எடுத்த காரியத்தை திறம்பட முடிக்கும் ரிஷப ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், சுகாதிபதி சூரியனுடன் இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே சுகங்களும், சந்தோஷங்களும் வந்துசேரும் மாதம் இது.

    தொடர்கதையாய் வந்த கடன்சுமை குறையும். இடம், பூமி வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உண்டு. 'குரு மங்கள யோகம்' இருப்பதால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வாய்ப்பு உருவாகும்.

    சனி - சூரியன் பார்வை

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இம் மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரைப் பார்க்கிறார். தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால், தொழில் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பது அரிது. கொடுக்கல்- வாங்கலில் தடுமாற்றங்களை சந்திப்பீர்கள்.

    பகைக் கிரகங்களின் பார்வையால் சுக ஸ்தானம் பலமிழக்கிறது. எனவே உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக் குரிய அங்கீகாரம் கிடைக்காது. பணிச்சுமை அதிகரிக்கும். மன அழுத்தம் கூடும். உயர் அதிகாரிகள் கெடுபிடியாக நடந்துகொள்வர். எதிர்பார்த்த சலுகைகள் மறுக்கப்படு வதன் காரணமாக, 'இந்த வேலையில் இருந்து விலகி, வேறு வேலைக்குச் செல்லலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

    சுக்ரன் நீச்சம்

    ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் நீச்சம் பெறுவதால் இக்காலத்தில் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர், திடீரென வரும் மாற்றங்கள், மன வருத்தத்தை உருவாக்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். ஒரு சிலருக்கு கைமாற்று வாங்கும் சூழல் உருவாகும்.

    6-க்கு அதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். அடிக்கடி ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு, இனம்புரியாத கவலையை அளிக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்தாலும், அதை உபயோகப் படுத்திக்கொள்ள இயலாது. உடன் பணிபுரிபவர்களிடம் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி விவரிக்க வேண்டாம்.

    மிதுன - செவ்வாய்

    ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். விரயாதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்திற்கு வரும்போது விரயத்திற்கேற்ற வரவு வந்துசேரும். எந்த ஒரு காரியத்தையும் 'பணம் கைக்கு வந்ததும் செய்யலாம்' என்று நினைத்தால் அது நடக்காது.

    காரியத்தை தொடங்கிவிட்டால் தேவையான தொகை கைக்கு வந்துசேரும். 7-க்கு அதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து, உதிரி வருமானம் வரலாம். வெளிநாடு செல்லும் முயற்சி அனுகூலமாகும். உத்தியோகத்தில் இனிமை தரும் விதத்தில் இடமாற்றம் கிடைத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள இயலுமா? என்பது சந்தேகம்தான்.

    சிம்ம - புதன்

    ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சுக ஸ்தானத்திற்கு வரும்போது எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். திருமணம், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். இதுவரை வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி வெற்றிபெறும். 'புத ஆதித்ய யோக'த்தால் பொருளாதார நிலை உயரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் பற்றிய பயம் அகலும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு வருமானம் உயரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிள்ளை களால் பெருமை சேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 19, 20, 22, 23, 29, 30, செப்டம்பர்: 2, 3, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    ×