search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    வைகாசி மாத ராசிபலன்

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தனாதிபதி புதன் இணைந்திருப்பதால் வரவும், செலவும் சமமாகவே இருக்கும். வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க குரு பகவான் சஞ்சாரம் கை கொடுக்கும். ஜென்ம குருவாக இருந்தாலும் அதன் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் பூர்வீகச் சொத்து தக ராறுகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். ஜென்ம குருவிற்குரிய வழிபாடுகளை மேற்கொண்டால் நன்மைகள் கிடைக்கும்.

    ரிஷப - சுக்ரன்

    வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது, யோகம் தான். என்றாலும் உங்கள் ராசிக்கு பகைக் கிரகமாக விளங்கும் குரு பகவான், அவரோடு இணைந்திருப்பதால் திடீர் திடீரென சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மனக் குழப்பம் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் உடனடியாகச் செய்ய இயலாது. ஒரு காரியத்தை 'செய்யலாமா?, வேண்டாமா?' என்ற இரட்டை சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். சகப் பணியாளர்களாலும் தொல்லை உண்டாகலாம்.

    ரிஷப - புதன்

    வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன - பஞ்சமாதிபதி உங்கள் ராசியில் சஞ்சரிக் கும் பொழுது, தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டே இருக்கும். தெய்வ தரிசனங்கள் திருப்தி தரும் விதம் அமையும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரபலமானவர்கள், உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

    மேஷ - செவ்வாய்

    வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான செவ்வாய் விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பதால், இந்த காலகட்டத்தில் விரயங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். யாரை நம்பியும், எதுவும் செய்ய இயலாது. கடன் சுமையின் காரணமாக ஒருசிலர் வாங்கிய இடத்தை விற்க நேரிடும். அண்ணன் - தம்பிகளுக்குள் கருத்துவேறுபாடுகள் தோன்றி மறையும். உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பூமி விற்பனையில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும்.

    மிதுன - புதன்

    வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். தனாதிபதி தன ஸ்தானத்தில் பலம்பெறுவது உங்களுக்கு யோகமான நேரமாகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானப் பெருக்கம் ஏற்படும். குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் - வாங்கல்களை ஒழுங்கு செய்துகொள்வீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை முடிவடையாத காரியங்கள், இப்பொழுது துரிதமாக நடைபெறும். கல்யாணம், காதுகுத்து, கடை திறப்பு விழா போன்ற சுபகாரியங்கள் நடைபெறும் நேரம் இது.

    மிதுன - சுக்ரன்

    வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் தனாதிபதி புதனோடு, உங்கள் ராசிநாதன் சுக்ரன் இணைவது ஒரு அற்புதமான நேரமாகும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள், உங்களை விட்டு விலகுவர். பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து புதிய பாதை அமைத்துக் கொடுப்பர். வீடு வாங்குவது, இடம் வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதாயம் தரும் தகவல்கள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், இலாகா மாற்றம் வரலாம். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ - மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். பெண்களுக்கு சேமிப்பு உயரும். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 19, 30, ஜூன்: 1, 2, 11, 12, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    ×