search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை

    1.12.2024 முதல் 7.12.2024 வரை

    பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் குரு மற்றும் செவ்வாயின் பார்வையில் பாக்கிய ஸ்தானம் செல்கிறார். தடைபட்ட அனைத்துவிதமான பாக்கிய பலன்களையும் அடைவீர்கள். திருமணம், குழந்தை பேறு, பேரன், பேத்தி,வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும். தேவையற்ற கற்பனை, பயங்கள் அகலும். மன சஞ்சலமின்றி நிம்மதியாக தூங்குவீர்கள். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்ம பலம் கூடும்.

    தகப்பனார் வழியில் ஆதரவும், அனுகூலமும் உண்டாகும். சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளிநாடு வெளி மாநிலத்திற்கு இடம் பெயரலாம்.சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். 2.12.2024 அன்று மாலை 3.45 மணி முதல் 4.12.2024 அன்று இரவு 11.19 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மேலதிகாரிகள் உங்களிடம் அதிகப் பணிச்சுமையை திணிக்கலாம்.சிலர் பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வெள்ளை மொச்சை தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×