என் மலர்
ரிஷபம்
12.01.2025 முதல் 18.01.2025 வரை
பொற்காலம் துவங்கப் போகும் வாரம். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு 9,10-ம் அதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார். மகாலஷ்மியின் கனிவுப் பார்வை உங்கள் மேல் பதியப் போகிறது. சனி பகவான் ஆதரவு கரம் நீட்டி லாபத்தில் திளைக்க செய்யப் போகிறார். விரும்பிய சொந்த தொழில் வாய்ப்பு தேடி வரும்.
புதிய தொழில் துவங்க, தொழில் கிளைகள் திறக்க, தொழிலை விரிவு செய்ய ஏற்ற நேரம். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அரசின் திட்டங்கள், மானியம், உதவி தொகை கிடைக்கும். வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம்.
தற்போது சுப விரயச் செலவுகளான திருமணம், வீடு கட்டுதல், வாகன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளுதல் புதிய முதலீடு செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம். சிறு பிரச்சனைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். தலைமறைவாக வாழ்ந்தவர்கள், காணாமல் போனவர்கள், முதியோர் இல்லம் சென்றவர்கள் வீடு திரும்புவார்கள். பவுர்ணமியன்று அஷ்டலட்சுமிகளை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406