search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை

    24.11.2024 முதல் 30.11.2024 வரை

    மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம். ராசியில் உள்ள குருவை சூரியன், பார்ப்பது சிவராஜயோகம்.தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். மிகப் பெரிய வெற்றி கிடைக்கப் போகிறது. உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல நேரம் துவங்கப் போகிறது. மூத்த சகோதரம், சித்தப்பாவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளை பேசித் தீர்க்கலாம். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டப் பொருள் கிடைக்கலாம். அல்லது பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்த நல்ல காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வாடகை வீட்டுப் பிரச்சனையில் இருந்து விடுபட்டு சொந்தமாக அபார்ட்மென்ட் வாங்கி குடியேறுவீர்கள்.

    மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். அரியர்ஸ் பாடங்களை எழுதி முடிக்கலாம்.காதல் திருமணத்தில் நிலவிய தடைகள் அகலும்.பெண்களுக்கு பிறந்த வீட்டு சொத்து உரிய முறையில் வந்து சேரும். வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி பெறும். பெரிய தொழில் முதலீடுகள், பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்த்தல் நலம். முக்கிய வழக்குகளை ஒத்தி வைக்கவும். ஆரோக்கியம் மேன்மை பெறும். மாணவ, மாணவிகளின் நினைவாற்றல் கூடும். பிரதோஷ வழிபாட்டால் நன்மைகள் கூடும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×