என் மலர்
ரிஷபம்
வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை
27.10.2024 முதல் 3.11.2024 வரை
நினைப்பதெல்லாம் நடைபெறும். அற்புதமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன் வீட்டை தானே பார்க்கிறார். இதுநாள் வரை பின் தொடர்ந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.பல்வேறு சுப பலன்கள் உண்டாகும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு, மனை, தோட்டம் வாங்கலாம்.பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். தங்கம் வாங்குவீர்கள்.வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும்.
செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும்.புகழ் மிக்கவர்களைக் கொண்டு முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புதிய தொழிலில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். தீபாவளி விடுமுறை பயனுள்ளதாக இருக்கும்.அஷ்டமாதிபதி குரு வக்ரமடைவதால் வெளிநாடு சென்ற சிலர் வேலை பிடிக்காமல் மீண்டும் சொந்த ஊர் திரும்புவார்கள்.திருமண முயற்சிகள் கைகூடும்.லலிதா சகஸ்ஹர நாமம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406