என் மலர்
ரிஷபம்
வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை
8.12.2024 முதல் 14.12.2024 வரை
மகிழ்ச்சியான வாரம். ராசியில் நிற்கும் அஷ்டமாதிபதி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் வெளியில் சொல்ல முடியாது தவித்த பல பிரச்சனைகள் தானாக தீரும். இழந்த நிம்மதி, சந்தோஷம் உங்களுக்குள் மீண்டும் குடிபுகும். அவப்பெயர்கள், சங்கடங்கள் விலகும். புதிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப்போகிறது. குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி பெருகும்.வேலை செய்யுமிடத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டு. பதவி உயர்வு, உத்தியோகத்தில் இடமாற்றம், மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படும்.
கணவன், மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள். இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பெண்கள் நேரத்தை சரியாக பயன்படுத்தும் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது நன்மை தரும். புத்திரர்கள் வழியில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ரோஜா மாலை சாற்றி சிவ பெருமானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406