search icon
என் மலர்tooltip icon

    கன்னி

    12.01.2025 முதல் 18.01.2025 வரை

    காரிய சித்தி உண்டாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் குரு மற்றும் செவ்வாயின் பார்வையில் உள்ளார். ராசி அதிபதி புதன் சுக ஸ்தானத்தில் சஞ்சாரம். கேந்திரமும், திரிகோணமும் பலம் பெறுவதால் கன்னி ராசியினர் நிம்மதி பெருமூச்சு விடலாம். கிணற்றில் விழுந்த கல்லாக இருந்த அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் கடனில் இருந்து மீளக் கூடிய மார்க்கம் தென்படும்.

    பூர்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தை சரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம். பொங்கல் விடுமுறைக்கு புனித நீராடல், புனித தல யாத்திரை சென்று வர வாய்ப்பு கிடைக்கும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்த சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் முன்னோர் வழி கர்ம வினை தாக்க நோய் ஆரம்பமாகும் அல்லது அதிகமாகும். உடல் அசதி உருவாகும்.

    பவுர்ணமியன்று சப்த மாதர்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×