என் மலர்
கன்னி
வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை
22.12.2024 முதல் 28.12.2024 வரை
உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் வாரம். ராசிக்கு குருப் பார்வை. சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி புதனுக்கு குரு மற்றும் சனி பார்வை. புத்தி சார்ந்த, கற்ற கலை சார்ந்த வருமானம் உண்டு, ஏதாவது புதிதாக விஷயம் கற்று அதை சார்ந்த தொழில் ஆரம்பிக்கலாம். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். வராக் கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் நோய்த் தொல்லை குறையும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் அனுகூலமாகும். வீடு கட்ட வாகனம் வாங்க உகந்த நேரம். புதிய சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணம் உண்டாகும்.
தொழில், உத்தியோக நிமித்தமாக குறுகிய காலத்திற்கு தந்தை வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வரலாம். மாணவர்களுக்கு விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். பொறுப்புடன் வேலை செய்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளுடன் எல்லா விசயங்களையும் மனம் விட்டுப் பேசும் படியான சூழல் உருவாகும். இதுவரை வேலை கிடைக்காத மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406