search icon
என் மலர்tooltip icon

    கன்னி

    வார ராசிபலன் 29.12.2024 முதல் 4.1.2025 வரை

    29.12.2024 முதல் 4.1.2025 வரை

    நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். 2,9-ம் அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சனியுடன் ராசிக்கு 6-ல் செவ்வாயின் பார்வையில் சஞ்சாரம். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடன் அகற்ற உகந்த நேரம். தாய், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் நல்லாசிகளை பெற்றால் சுய ஜாதக ரீதியான பாதிப்புகள் அகலும். பெரிய மனிதர்களின் தொடர்பால் சமுதாய அங்கீகாரம் கூடும். தாய் வழிச் சொத்து விஷயத்தில் உடன் பிறந்தவர்களுடன் சிறு சலசலப்பு ஏற்படும். பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை பஞ்சாயத்து வரை சென்று சாதகமாகும்.

    வார இறுதியில் வேலைப்பளு அதிகரிக்கும். வேலை, தொழிலில் மறைமுக தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக் கூடும். சில மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் வெற்றி உங்களுக்கே. விவசாயிகளுக்கு வெள்ள நிவாரண நிதி கிடைக்கும். பிள்ளைகளால் மேன்மை உண்டாகும். ஆரோக்கிய குறைபாட்டிற்கு மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். அமாவாசையன்று பறவைகளுக்கு தானியங்களை இரையிட துன்பங்கள் விட்டு விலகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×