search icon
என் மலர்tooltip icon

    கன்னி

    வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை

    5.1.2025 முதல் 11.1.2025 வரை

    விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியனுடன் சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுகிறார். வளர்த்த கடா மார்பில் பாயும் என்பது போல் உங்களின் சகோதரர் அல்லது உங்கள் உதவியைப் பெற்றவர்களே போட்டியாக, எதிரியாக மாறுவார்கள். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதால் பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. கண்டகச்சனி தொடங்க உள்ளதால் தொழில், வேலையில் மாற்றம் ஏற்படலாம். விரும்பிய வேலைக்கு நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றாலும் சிபாரிசுக்கு அலைய நேரும்.

    தொழில் வாழ்க்கை முறையில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் சனிக்கு ராகு சம்பந்தம் ஏற்பட போவதால் இனம் புரியாத மனக்குறை, கவலை தோன்றலாம். வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். சிலர் கடன் பெற்று வசதி, வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வார்கள். 7.1.2025 மாலை 5.50 முதல் 9.1.2025 அன்று இரவு 8.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது அல்லது ஆதாயம் குறையும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். ஸ்ரீ ரங்கநாதரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×