search icon
என் மலர்tooltip icon
    • மந்திரத்தை விடாமல் ஜபிக்கவும்.
    • அன்னதானம் செய்யும் நேரத்தை மட்டும் ஓய்வாக எடுத்துக்கொள்ளவும்.

    ஆடி அமாவாசையை இந்துக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். நம்மில் பலருடைய முன்னோர்கள் (இறந்துபோன நமது தாத்தா, பாட்டி= சிலருக்கு அம்மா, அப்பா) இந்த நாளில் நம்முடைய கடமையைச் செய்கிறோமா? என்பதை விண்ணில் இருந்து கவனித்துக்கொண்டிருப்பார்கள். கலியுகமான நாம் வாழும் யுகத்தில் மட்டுமே அவர்கள் அவ்வாறு கவனிப்பதை நம்மால் நேரடியாகப்பார்க்க முடியாது. ஆனால், உணர முடியும்.

    நமது அம்மாவின் அப்பா, அம்மா மற்றும் அப்பாவின் அம்மா, அப்பாக்களின் அல்லது தாத்தாக்கள், பாட்டிகளின் நினைவு நாட்களை திதியின் அடிப்படையில் நினைவிற்கொண்டு, அந்த தமிழ் மாதத்தில் அந்த திதி வளர்பிறைதிதியா? அல்லது தேய்பிறைத் திதியா? என்பதை ஆஸ்தான ஜோதிடர் மூலம் அறிந்து பழமையான சிவாலயங்களுக்குச் சென்று அன்னதானம் செய்ய வேண்டும்.

    இது நான்கு யுகங்களாக நமது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. காலப்போக்கில், நமது முன்னோர்கள் இறந்த நாட்களை மறந்து விடுவதால் மொத்தமாக முன்னோர்களுக்கு அன்னதானம் செய்ய மூன்று முக்கிய நாட்களை நமது முன்னோர்கள் சிவபெருமானின் ஆசியோடு தேர்ந்தெடுத்துள்ளனர். அவைகள்:- ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவசை.

    ஒவ்வொரு ஆடி அமாவாசையன்றும் வடபாரதத்தில் காசி, ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் நதிக்கரையோர சிவாலயங்கள் முழுவதும் அதிகாலையில் நீராடி அன்னதானம் செய்வது வழக்கம். தென்பாரதத்தில் ராமேஸ்வரம், காவிரிக்கரையோரம், சதுரகிரி, அண்ணாமலை மற்றும் ஏராளமான சிவாலயங்களில் கடலில் அல்லது நதியில் அல்லது வீட்டில் நீராடி சிவனை வழிபட்டு அன்னதானம் செய்வது வழக்கம் ஆகும்.

    ஆன்மீகக்கடல் வாசக, வாசகிகளான நாம் செய்ய வேண்டியது என்ன?

    வீட்டில் அல்லது பழைமையான சிவாலயத்தில் இருக்கும் கடல் அல்லது நதி அல்லது சுனையில் நீராட வேண்டும். சிவாலயம் அல்லது நமது வீட்டில் தனியறையில் பின்வரும் மந்திரத்தை குறைந்தது 1 மணி நேரம் அதிகபட்சமாக 12 மணி நேரம் ஜபிக்க வேண்டும். (ஒரு மணி நேரத்துக்கு 10 நிமிடம் இடைவெளிவிட்டுக் கொள்வது நல்லது).

    சிவாலயம் எனில், அங்கே இருக்கும் கால பைரவர் அல்லது சொர்ண பைரவர் சன்னதியில் மஞ்சள் துண்டு விரித்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும். பின்வரும் மந்திரத்தை விடாமல் ஜபிக்கவும். முதலில் ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும், அடுத்து ஓம் (உங்கள் இஷ்டதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும், அடுத்து ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறையும் ஜபித்துவிட்டு ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று குறைந்தது ஒரு மணிநேரம் வரையிலும், அதிகபட்சம் 5 அல்லது 12 மணி நேரம் வரையிலும் ஜபிக்கவும்.

    ஒரு மணி நேரம் வரை ஜபித்ததும், அருகில் இருக்கும் உணவகத்துக்குச் சென்று குறைந்தது 3 அதிகபட்சம் 27 காலை உணவுப்பொட்டலங்களை வாங்கி கோவில் வாசலில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்யவும். காலை அன்னதானத்தை காலையில் 6 மணி முதல் 8 மணிக்குள்ளும், மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள்ளும், இரவு 7 மணி முதல் 9 மணிக்குள்ளும் இவ்வாறு ஒவ்வொரு முறையும் அன்னதானம் செய்யவும்.

    இந்த அன்னதானம் செய்யும் நேரத்தை மட்டும் ஓய்வாக எடுத்துக்கொள்ளவும். மீதி நேரங்களில் கால பைரவர் அல்லது ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அமர்ந்து கொண்டு, ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று ஜபித்துக்கொண்டே இருக்கவும். ஜபித்து முடித்ததும் ஒரு இளநீர் அருந்தவும். இந்த வழிமுறையை தமிழ்நாட்டுக்குள் இருப்பவர்கள் பின்பற்றலாம்.

    வீடு எனில், வீட்டில் தெற்குபக்கச் சுவரில் மஞ்சளில் ஒரு சூலாயுதம் வரையவும். அந்த சூலாயுதத்தின் மீது குங்குமத்தால் மீண்டும் ஒரு சூலாயுதம் வரையவும். இது பைரவரின் சின்னம் ஆகும். மேலே கூறியது போல மந்திரங்களை அந்த சூலாயுதத்தைப் பார்த்தவாறு ஜபிக்கவும். அருகில் இருக்கும் அனாதை இல்லம் அல்லது சிவாலயம் அல்லது ஆதரவின்றி வாழ்ந்து வரும் முதியவர்கள் இவர்களில் யாருக்காவது அன்னதானம் (வீட்டில் சமைத்தது) செய்ய வேண்டும். இந்த முறையை வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் பின்பற்றலாம்.

    இந்த நாள் முழுக்க யாரையும் திட்டக் கூடாது; காம ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது; பொறாமைப்படக்கூடாது.

    • அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது.
    • அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு...

    ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன்

    வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

    விரதம் சரி... அது என்ன கதை? எதற்காக அதைச் சொல்ல வேண்டும்?

    அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான்.

    மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடியபோது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

    இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்.. அரற்றினாள்.. தவித்தாள்.. தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள்.

    இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை

    வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

    சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும். ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில்

    அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால், நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.

    உலக உயிர்களெல்லாம் இறைவனின் பிரதிநிதிகளான தேவர்களால் பாதுகாக்கப் படுகின்றனர். தேவர்களுக்கு ஆறுமாதம் இரவுக்காலம். ஆறுமாதம் பகல்காலம். பகல்காலம் என்பது தை முதல் ஆனி வரையிலும், இரவுக்காலம் என்பது ஆடி முதல் மார்கழி வரையிலும் இருக்கும். இந்த இரவுக்காலத்தில் தேவர்கள் உறங்கும் வேளையில் மக்களைக் காக்க ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியே நம்

    முன்னோர்கள்.

    எனவே தான் தேவர்கள் உறங்கும் வேளையில் இறந்த நம் முன்னோர்கள் விழித்திருந்து நம்மை காக்க பூமிக்கு வருவதாக ஐதீகம். அந்த அடிப்படையில், ஆடி மாதம் வரும் பூரண அமாவாசையில் அவர்களை வரவேற்க நாம் தயாராகிறோம். மனிதன் இருக்கும் வரை தான் அவன் பாவ ஜென்மம். இறந்து போனால் அவன் புண்ணிய ஆத்மா. அவனுக்கு நம்மை நல்வழிப் படுத்துவதற்குரிய அனைத்து தகுதிகளும்

    உண்டு. எனவே இறந்து போன நம்மைச் சார்ந்த அனைவருமே, வயது வித்தியாசமின்றி நம்மை பாதுகாக்க வருகிறார்கள்.

    தமிழகத்தில் காவிரிக்கரைப் பகுதி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரை, பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவருவது மிகுந்த நன்மையை தரும். முடிந்தால் காசிக்கு சென்று வருவது மிக மிக சிறப்பானது.

    ஏனெனில், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், உலகமே இமயமலையில் கூடியது. அதனால் வடக்கு திசை தாழ்ந்த போது, தெற்கு நோக்கி அகத்தியர் அனுப்பப்பட்டார். அவர் தனது கமண்டலத்தில் கங்கையைக் கொண்டு வந்தார். அப்போது விநாயகர் காகம் உருவமெடுத்து கமண்டலத்தை தட்டி விட, காவிரி உருவானது.

    விழுந்த கமண்டலத்தை அகத்தியர் படாரென பாய்ந்து எடுத்து மீதி தண்ணீருடன் பொதிகை வந்தார். அந்த தண்ணீரை பொதிகையின் உச்சியில் ஊற்ற அது தாமிரபரணியாக உருவெடுத்தது. எனவே காவிரி, தாமிரபரணி ஆகிய இரண்டு மாபெரும் நதிகளும் ஆடியில், பிறந்ததாக கூறப்படுவதுண்டு. நதிகள் பிறந்த இந்த புண்ணிய மாதத்தில் வரும் ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி,

    தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது.

    கிராமக்கோயில்களில் இப்போது ஆடி அமாவாசை விழாவை, ஆடு வெட்டி கொண்டாடுகிறார்கள். இந்த பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒரு முக்கியமான விஷயத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். ஆடி அமாவாசை தினத்தில்தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் ஆடு வெட்டுதல் போன்ற பலி வாங்கும் பாவ காரியங்களைச் செய்யாமல் முன்னோர்களை வணங்கி புண்ணியத்தை

    சேர்க்க வேண்டும். 

    ×