என் மலர்
TNLGanesh
About author
- தனிப்படை போலீசார், அரி பால சுப்பிரமணியன் ஓட்டி வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.
- ரூ. 1.30 லட்சம் மதிப்புள்ள புகையிலை உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தை சேர்ந்தவர் அரி பால சுப்பிரமணியன் (வயது 33). பீடி வியாபாரி.
இவர் தனது ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவ தாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து நேற்று மாலை தனிப்படை போலீசார், குருவன்கோட்டை - துத்தி குளம் சாலையில் அரி பால சுப்பிரமணியன் ஓட்டி வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது, ஆட்டோவில் பீடி மூட்டைகளுக்கு நடுவில் 544 புகையிலை பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரி பால சுப்பிரமணியனை போலீசார் பிடித்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, ரூ. 1.30 லட்சம் மதிப்புள்ள புகையிலை உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அரி பாலசுப்பிர மணியனை ஆலங்குளம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? அரி பால சுப்பிரமணியனுக்கு புகையிலை கிடைத்தது எப்படி? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டி தேர்வு நடத்தப்பட்டது.
- மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டி தேர்வை எழுதினர்.
தென்காசி:
தென்காசி தீயணைப்பு மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலர் கணேசன் ஆணையின்படி, பள்ளி மாணவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டித் தேர்வானது நடத்தப்படுகிறது.
அதன்பேரில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு செங்கோட்டை தீயணைப்பு மீட்பு பணித்துறை சிறப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் மற்றும் நிலைய பணியாளர்கள் மாரிமுத்து, ஆல்பர்ட், கோமதி சங்கர் ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டி தேர்வை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டி தேர்வை எழுதினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா மற்றும் ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஆகியோர் செய்திருந்தனர்.
- சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சுரண்டை செல்லும் தார் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளித்தது.
- சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பங்களை அகற்றாமலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து சுரண்டை செல்லும் தார் சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளித்ததால் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.மேலும் தார் சாலையானது சற்று அகலப்படுத்தப்பட்ட நிலையில் சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பங்களை அகற்றாமலேயே தற்பொழுது புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்கம்பத்தை சாலையோரம் மறு நடவு செய்ய வேண்டும் எனவும், மின்கம்பங்களில் உரசும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி பக்கத்து வயல்களுக்கும் பரவியது.
- அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்து தங்கையாவை மீட்க முயன்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கையா (வயது 65). விவசாயி. இவருக்கு சொந்த மான தோட்டம் ஊருக்கு வட புறமாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை இனி தொடங்கும் என்பதால் வயலில் முளைத்திருந்த முட்செடிகளை அப்புறப் படுத்தி நெல் நடவுக்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ள அவர் முடிவு செய்தார். இதற்காக நேற்று மாலை அவர் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், குப்பைகளுக்கு அவர் தீ வைத்தார்.
அப்போது காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி பக்கத்து வயல்களுக்கும் பரவியது. தீ பற்றி எரிந்ததால் தென்னை ஓலைகளை கொண்டு அதனை அணைக்க தங்கையா முயற்சி செய்து உள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர் தீயில் தடுமாறி விழுந்தார்.
இதில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. அவர் கத்தி கூச்சலிட்ட நிலையில் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.
- போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
தென்காசி:
நெல்லை பிரான்சிஸ் சேவியர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி, வினாடி வினா, செயல்திட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி, பாரத் வித்யா மந்திர், ரோஸ்மேரி, பிரான்சிஸ் சேவியர், டான்பாஸ்கோ உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர்கள் நித்திஸ், ஜெயதர்ஷன், ஸ்ரீஜித் ஆகியோர் கழிவறை தொட்டியை சுத்திகரிக்கும் வேளையில் ஏற்படுகின்ற உயிரிழப்பைத் தடுக்கும் விதமான செயல்திட்டத்தை வடிவமைத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரான்சிஸ் சேவியர்ஸ் கல்லூரி சார்பாக பாராட்டு சான்றிதழும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனத்தை வழங்கி அதன் சேவையை தொடங்கி வைத்தார்.
- நிர்வாகிகள் கூட்டத்தில் தென்காசி தெற்கு தொகுதிக்கு கலைஞர் படிப்பகம் அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 88 ஆயிரத்தில் 58 வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வரவேற்று பேசினார்.தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனத்தை வழங்கி அதன் சேவையை தொடங்கி வைத்தார்.
முன்னதாக ஆலங்குளம் வந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை, ஆலங்குளம் சேர்மன் திவ்யா மணிகண்டன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது செண்டை மேளம் முழங்க பெண்கள் பூரணகும்ப மரியாதை செலுத்தி அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்வி போஸ், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, சிவன் பாண்டியன், அன்பழகன், சீனித்துரை, மாரி வண்ணமுத்து, ஜெயக்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பி.எஸ். அண்ணா மலை, ஆலங்குளம் பேரூர் செயலாளர் நெல்சன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மருதம்புத்தூர் ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா, துணை அமைப்பாளர் சரஸ்வதி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் செல்வக்கொடி, ஊராட்சி தலைவர்கள் சந்திரசேகர், அய்ய னார்குளம் பஞ்சாயத்து தலைவர் நீதிராஜன், நல்லூர் பஞ்சாயத்து தலைவர் சிம்சோன், மருதம்புத்தூர் பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை மற்றும் சாந்தி ஆண்டி, வளர்மதி அய்யனார், பால்தாய், தானியேல், ஸ்நாபக அந்தோணி, கருப்பசாமி, மாலதி சுரேஷ், வெங்கடேஸ்வரி முரு கேசன், பாலசுப்பிர மணியன், மருதநாச்சியார், மீனா சுப்பிரமணியன், செல்வி மணிமாறன், மகரஜோதி சரவணன், முருகன், ஜெயராணி குமார், பூசத்துரை, பொன்ராஜ், புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பால்விநாயகம், முத்துலெட்சுமி முருகன், ராஜேஸ்வரி பால சுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி செயலர்கள், உதவி யாளர்கள், ஆலங்குளம் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலர்கள் உள்பட கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடு களை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆலங்குளம் ஏ.ஜே. மகாலில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தென்காசி தெற்கு தொகுதிக்கு கலைஞர் படிப்பகம் அமை த்திட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வரவேற்று பேசினார். அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை தாங்கினார். அமைச்சர் கே .கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை, மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, அன்பழகன், சீனித்துரை, சிவன் பாண்டியன், மாரி வண்ணமுத்து, இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ், மகளிரணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மாணவரணி ரமேஷ் கதிர்வேல், ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் பேரூ ராட்சி தலைவர் பொன் அறிவழகன், இளைஞர் அணி கோமு, தளபதி, மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆறுமுகச்சாமியின் மனைவி இரு குழந்தைகளுடன் அவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
- ஆறுமுகசாமியை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் கீழ காலனி கீழ தெருவை சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி (வயது 48), கூலி தொழி லாளி. இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட தாகவும், அவரது மனைவி தனது இரு குழந்தைகளுடன் ஆறுமுகச் சாமியை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது அம்மாவுடன் வசித்து வந்த ஆறுமுகசாமியை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை அவரது உறவினர்கள் மீட்டு தென்காசி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- போட்டியில் மாணவி சிவமுத்துலெட்சுமி முதலிடம் பிடித்தார்.
- மாணவன் அருண், மாணவி ராமலெட்சுமி ஆகியோரும் போட்டியில் வெற்றி பெற்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் முன்னாள் சபாநாயகர்கள் ஆவுடையப்பன், செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கருத்தரங்கில் நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் பேசிய தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி சிவமுத்துலெட்சுமி முதலிடம் பிடித்தார். இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் சக்தி 2-வது இடமும், முதலியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் முகம்மது சிராஜ் 3-வது இடமும் பிடித்தனர்.
மேலும் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் அருண், பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளி பிளஸ்-2 மாணவி ராமலெட்சுமி ஆகியோரும் போட்டியில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாருமான ஆவுடையப்பன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியல் பழனிநாடார் எம்.எல்.ஏ., சட்டப் பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், இணை செயலாளர் சாந்தி, துணை செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் வரதராஜன். தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பாஸ்கர், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சதீஷ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது காட்டு மிளா மோதி விபத்தில் சிக்கினார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தென்காசி:
கடையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாதாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது காட்டில் இருந்து குறுக்கே வந்த காட்டு மிளா மோதி விபத்தில் சிக்கினார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் பாலமுருகனின் தந்தையை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தி.மு.க. சார்பில் ரூ. 5 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஆலங்குளம் முன்னாள் துணை சேர்மன் தங்க செல்வம், ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் சுந்தரம், ராஜதுரை, கடையம் பெரும்பத்து ஊராட்சி தலைவர் பொன்சீலா பரமசிவம், அவைத்தலைவர்கள் ரவி (கடையம்வடக்கு ) கே.பி.என்.சேட், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் வின்சென்ட் (கடையம் தெற்கு), மாவட்ட பிரதிகள் அய்யன்சாமி, முகம்மது யாகூப், அன்பழகன், கடையம் வடக்கு ஒன்றிய பொருளாளர் அஜீஸ் அகமது, ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ரம்யா ராம்குமார், சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி, மாரி இசக்கிகுமார், முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜெயராணி அண்ணாதுரை, அகமது ஈசாக், மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் ஆதம் சுபேர், பேரூர் கவுன்சிலர் சந்திரன், முதலியார்பட்டி முகம்மது, குணா, லெட்சுமணன், ராஜபாண்டி, கடையம் அரசு ஒப்பந்த்தாரர் முருகன், வடமலைபட்டி மகாராஜன், சேர்மலிங்கம், கடையம் ஊராட்சி உறுப்பினர் கமல் முருகன், அருணாச்சலம்பட்டி ராஜேந்திரன், நவீன் , வெய்க்கால்பட்டி பால்ராஜ், பண்டாரகுளம் கருத்தபாண்டி, சம்பன்குளம் ஊராட்சி தலைவர் ஜன்னத் சதாம், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பிவீ கோதர் மைதீன், ரவணசமுத்திரம் தளபதி பீர், ஆம்பூர் மூர்த்தி, விவசாய தொழிலாளர் அணி கருணாநிதி, அமைப்பு சாரா ஓட்டுனர் துணை அமைப்பாளர் மேசியா ஜெயசிங், ஓட்டுனர் பூதத்தான், வெள்ளப்ப னேரிப்பட்டி செந்தூர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- குண்டாறு அணை கடந்த சில தினங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
- தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு அணை. இந்த அணையானது கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டியுள்ளது. நடப்பா ண்டில் மட்டும் 2-வது முறை யாக நிரம்பி வழிந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குண்டாறு அணையில் நிரம்பி வழியும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்பட்டு வருகிறது. மேலும் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அணையில் தண்ணீர் வழிந்தோடும் மேல்தளத்தில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து வருவதால் விபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது.மேலும் அணைப்பகுதிக்குள் குதித்தும், 'டைவ்' அடித்தும் குளித்து வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்ட ஒரு சில பேர் உயிரிழந்த சம்பவம் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள நிலையில், மீண்டும் அது போன்ற சம்பவங்கள் நடை பெறாத வண்ணம் ஆபத்தான குளியலிடும் சுற்றுலா பணி களை தடுத்து நிறுத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், நிரம்பி வழியும் பகுதிக்கு யாரும் சொல்லாத வாறு தடுப்புகள் அமைத்து கண்காணிப்பதோடு அபராதம் விதித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நடராஜன் சாலையோரம் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார்.
- வெள்ளி பொருட்களை காணவில்லை என புகார் அளிக்க வியாபாரி முத்துக்குமார் போலீஸ் நிலையத்தில் நின்றுள்ளார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்த வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நடராஜன் சாலையோரம் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் விலை கூடிய வெள்ளி பொருட்கள் இருந்துள்ளது. உடனடியாக சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.
அதேநேரம் சங்கரன்கோவில் பகுதியில் 4 கிலோ பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்த மதுரையை சேர்ந்த வெள்ளி வியாபாரி முத்துக்குமார் வெள்ளி பொருட்களை காணவில்லை என புகார் அளிக்க போலீஸ் நிலையத்தில் நின்றுள்ளார். நடராஜன் கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்த பை முத்துக்குமாருடையது என்பதை கண்டறிந்த போலீசார் டி.எஸ்.பி. சுதீருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர் சாலையோரம் கிடந்த 4 கிலோ வெள்ளி பொருட்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த கூலித் தொழிலாளி நடராஜனை பாராட்டி சால்வை அணிவித்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
பின்னர் மதுரையை சேர்ந்த வெள்ளி வியாபாரி முத்துக்குமாரிடம் 4 கிலோ வெள்ளி பொருட்களை ஒப்படைத்தார். அப்போது செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் இருந்தனர்.
- ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களிடையே பன்மொழித்திறனை வளர்க்க சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
- மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த போனிக்ஸ் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களிடையே பன்மொழித்திறனை வளர்க்க சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் மொழிகள் மட்டுமில்லாமல் இந்தி, அரபு, பிரஞ்சு போன்ற மொழிகளும் இங்கு கற்பிக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் தகவல்தொடர்பு ஆங்கிலம், மேடை பேச்சுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தக்சின் பாரத் இந்தி பிரசார் சபா நடத்தும் மத்திய அரசு தேர்வுக்காக மாணவர்கள் பள்ளியிலேயே தயார்படுத்த படுகின்றனர். மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த போனிக்ஸ் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.பள்ளி பன்முக கற்றல் சூழலை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருவதற்கு பள்ளி நிர்வாகத்தினை மாணவர்களின் பெற்றோர்கள் பாராட்டினர். சிறப்பு வகுப்புக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் செய்திருந்தனர்.