என் மலர்
TNLGanesh
About author
- நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
- கொடிக்குறிச்சி, நயினாரகரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
நெல்லை:
கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் உபமின் நிலைய பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.அதன்படி கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், வலசை, சொக்கம்பட்டி, காசி தர்மம், தார்க்காடு, போகநல்லூர், கம்பனேரி, மங்களபுரம், இடைகால், கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் ஆதிலட்சுமி தெரிவித்துள்ளார்.
- அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
- நெல்லையப்பபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது.
தென்காசி:
கீழப்பாவூர் தேர்வு நிலை பேரூராட்சியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்பு செயலாளர் எஸ்.ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் யூனியன் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து சின்னக்குமார்பட்டி கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பிலான புதிய சமுதாய நலக்கூடமும், நெல்லையப்பபுரம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவி சாருகலா ரவி தலைமையில் நடை பெற்றது.
விழாவில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- எஸ்.அய்யாதுரை பாண்டியனுக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- சங்கரன்கோவிலில் உள்ள முக்கிய கோவில்களில் அய்யாதுரை பாண்டியன் சாமி தரிசனம் செய்தார்.
தென்காசி:
அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தென்காசி தொழிலதிபரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான எஸ்.அய்யாதுரை பாண்டியனுக்கு தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றாக இணைந்து கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதசுவாமி கோவிலின் பூரண கும்பம் மரியாதை உடன் உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் உள்ள முக்கிய கோவில்களில் அய்யாதுரை பாண்டியன் சாமி தரிசனம் செய்தார்.
- சங்கர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
- விழாவையொட்டி விநாயகர் தேங்காய் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கணக்கபிள்ளைவலசை வாரியர் சமுகத்திற்கு பாத்தியப்பட்ட சங்கர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி விநாயகர் தேங்காய் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர். ஏற்பாடுகளை சமுதாய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதேபோல் செங்கோட்டை அருகே உள்ள வல்லம், இலஞ்சி, பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகயில் உள்ள சிவபிள்ளையார் கோவில், செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், முக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் உள்ளிட்ட கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. செங்கோட்டை பால விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- 200-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
- 40-க்கும் மேற்பட்டோரை கண் புரை அறுவை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
கடையநல்லூர்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில் தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் கடையநல்லூரில் நடைபெற்றது. டவுன் கிளை தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் அன்வர் சாதிக், துணைச் செயலாளர்கள் பிலால் ஜலாலுதீன், பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மாவட்டத் தலைவர் அப்துல் சலாம் தொடங்கி வைத்தார். முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் நவீன் மற்றும் அன்னரோஸ்லின் ஆகியோர் தலைமையிலான குழுவினர் 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 40-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்வ தற்காக அழைத்து சென்றனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டவுன் கிளை நிர்வாகிகள் செயலாளர் ஹாலித், பொருளாளர் முகமது கனி, துணைத்தலைவர் அப்துல் அஜீஸ் ஆகியோர் செய்தனர். முகாமில் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதி யில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- தெப்பக்குளம் பகுதிகளில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
- தூய்மை பணியில் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றி புதிய மரக்கன்றுகளை நட்டு தூய்மை பாரத நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி நகர பாரதீய ஜனதா கட்சி தலைவர் மந்திரமூர்த்தி தலைமையில் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலையில் மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ குலசேகர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், முத்துலட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செந்தூர் பாண்டியன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் விவேக்குமார், இளைஞர் அணி நகர தலைவர் வைரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் யோகா சேகர், நகர பொருளாளர் நாகராஜ், நகர துணைத் தலைவர் மாரியப்பன், நகரச் செயலாளர் விஸ்வநாதன், நகரத் துணைத் தலைவி மகேஸ்வரி, சமூக ஆர்வலர் நவநீத கிருஷ்ணராஜா, ராணுவ பிரிவு மாவட்ட துணை தலைவர் சுரேஷ், நகர தலைவர் கண்ணபிரான், ராணுவ பிரிவு லட்சுமணன் அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் கணபதி, கிளைத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கும் விதமாக தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
- மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட 10 வகையான தூய்மை பணிகள் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கும் விதமாக தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியா் சுடர்மணி வரவேற்று பேசினார்.
அதனைதொடா்ந்து வளாகத் தூய்மை, கட்டிடங்கள் பராமரித்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட 10 வகையான தூய்மை பணிகள் நடந்தது. மேலும் மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக உடல் தூய்மை, வீடு, கழிவறை, பூங்கா, சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் தூய்மையைப் பேணிக் காப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொருளியல் முதுகலை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் திருவேங்கடம் பேரூர் செயலாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 85.44 லட்சம் செலவில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜான் ஆசீர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருவேங்கடம் பேரூர் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் முருகராஜ், நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், பள்ளி மேலாண்மை குழு துணைதலைவர் கலைச்செல்வி, காவல்கிளி, தி.மு.க. வார்டு செயலாளர் வீராசாமி, மாணவர் அணி வீரமணி, விக்னேஷ், மாவட்ட ஆதி திராவிட நலக்குழு உறுப்பினர் சங்கர், ஜான் ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
- வாறுகாலில் உள்ள சாக்கடைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சியில் தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு ஆலங்குளம் தாலுகா அலுவலக வளாகம், அதனை சுற்றியுள்ள மாறுகால் போன்ற பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் வாறுகாலில் உள்ள சாக்கடைகளை அகற்றி சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் ராஜசேகரன், வரி வசூலர் திருமலை வடிவம்மாள், 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தரம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தோரணமலை அடிவாரத்தில் காந்தி, காமராஜ் உருவ படங்கள் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி:
கடையம் அருகே அமைந்துள்ள தோரண மலையில் காந்தி பிறந்த நாள், காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு தோரணமலை அடிவாரத்தில் காந்தி, காமராஜ் உருவ படங்கள் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிலம்பு பாப்பையா, சிலம்ப பயிற்சி மாணவர்களின் சிலம்பப் போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
- கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.
- அரசு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற இணை இயக்குனர் பிரேமலதா கேட்டுக் கொண்டார்.
தென்காசி:
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆயுஷ்மான் பவா முகாம் நடைபெற்றது. பிரதம மந்திரி ஆரோக்கியா திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிறப்பு சுகாதார முகாம் நடத்தப்பட்டது. தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தார். பழனி நாடார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார்.
இணை இயக்குனர் பிரேமலதா அரசு திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பொதுமக்கள் அனைவரும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும்பிரதம மந்திரி காப்பீட்டு திட்ட அட்டைபெற்றுவருடத்திற்கு 5 லட்சம் மதிப்புள்ள சிகிச்சைகளைஇலவசமாக பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.அனைத்து பொதுமக்களும் மிகுந்த காப்பீட்டு திட்ட அட்டைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். உறைவிட மருத்துவர் செல்வபாலன் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, தேசிய சுகாதாரா திட்ட அலுவலர் கார்த்திக் அறிவுடைநம்பி, தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்புனர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டதில் தமிழக அளவில் 3-வது இடம் பிடித்த தென்காசி மருத்துவமனைக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார். மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் கார்த்திக் அறிவுடைநம்பி நன்றி கூறினார்.
- நிகழ்ச்சியை ஹாஜி முகமது அசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
- முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
கடையம்:
கடையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலு வலர் பழனிக்குமார் மேற்பார்வையில், ரவண சமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் தலைமையில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
சேவாலாயா சங்கிலி பூதத்தான் முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்ற துணை தலைவர் ராம லெ ட்சுமி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியை ஜமாத் தலைவர் ஹாஜி முகமது அசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். ஊராட்சிமன்ற உறுப்பினர் மொன்னா மொகமது எர்சாத் மருத்துவ அட்டை வழங்கி னார். முகாமில் மீரான், சாகுல்அமீது, ஜெய்லானி, தளபதி பீர், சின்ன ஜெய்லானி, அகமது ஷா, முகமது ஷீபக், மசூது அலி ஆகியோர் கலந்து கொ ண்டனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, ரத்த பரிசோ தனை செய்ய ப்பட்டது.
முகாமில் ஈ.சி.ஜி பரிசோதனை, சிறப்பு மருத்துவம், எலும்பு மருத்துவம் பொதுமருத்துவம், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம் பல் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காசநோய், தொழுநோய், குடும்பநலம் குறித்த கண்கா ட்சி அமைக்கப்பட்டது. நடமாடும் எக்ஸ்ரே மூலம் பயனாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் குறித்த உறுதி மொழி எடுக்கப்ப ட்டது.
முகாமில் மருத்துவர்கள் முகமது உமர், பாண்டியராஜன், அமுதா, சூரிய பிரபா, தமிழ் முதல்வி, ஆஷா பர்வின் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் முகாமில் சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வா ளர்கள் கலந்து கொண்டனர்.