என் மலர்
TNLGanesh
About author
- கனரக லாரியை அதன் டிரைவர் ஜெயக்குமார் “ஒர்க் ஷாப்பிற்கு” கொண்டு சென்றார்.
- லாரி டிரைலர் அங்கிருந்த மின் கம்பிகள் மீது மோதியதில் அவை அறுந்து விழுந்தன.
தென்காசி:
பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து கனிமவளம் ஏற்ற ஆலங்குளம் வந்த கனரக லாரி ஒன்றை பழுது நீக்குவதற்காக பாவூர்சத்திரத்தில் நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை அருகே உள்ள "ஒர்க் ஷாப்பிற்கு" அதன் டிரைவர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 55) கொண்டு சென்றார். வேலை முடிந்து பிரதான சாலைக்கு லாரியை கொண்டு வரும்போது அதன் டிரைலர் மேல் தூக்கியவாறு இருந்ததை கவனிக்காமல் அந்த டிரைவர் வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த மின் கம்பிகள் மீது மோதியதில் அவை அறுந்து விழுந்தன. அதன் காரணமாக அங்கிருந்த 4 மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அதிஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இரவு நேரத்தில் கொட்டும் மழையிலும் மின் கம்பங்களை வெகு நேரம் போராடி சீரமைத்த மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
- குண்டாறு அணை மூலமாக சுமார் 1,200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
- ஷட்டரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகளுக்கு முக்கிய நீராதாரமாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை விளங்கி வருகிறது.
மாவட்டத்தில் முதலில் நிரம்பும் மிகச்சிறிய அணையான குண்டாறு அணை மூலமாக சுமார் 1,200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் அணை நிரம்பிவிட்ட நிலையில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தால் அணையின் பிரதான மதகு பகுதியில் ஷட்டரில் மோதிய மரத்தடியால் ஷட்டர் சேதம் அடைந்தது. இதனால் அணையில் இருந்து 6 அடி அளவுக்கு தண்ணீர் வீணாக வெளியேறி தற்போது 30 அடியில் நீடிக்கிறது. அதற்குமேல் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்து வருவதாக விவசாயிகள் புகார் கூறினர்.
எனவே உடனடியாக அணை ஷட்டரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போது ஷட்டரில் அடைபட்ட மரத்தடியை தீவிர முயற்சிக்கு பின்னர் அதிகாரிகள் அகற்றினர். பின்னர் பழுதையும் சரி செய்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பூத்கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது.
- கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சி யில் 15 வார்டுகள் உள்ளது.
பாராளுமன்ற தேர்தல்
வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் இளைஞர்கள் இளம்பெண்கள், மகளிர் பாசறை, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கட்சி நிர்வாகிகளை கொண்டு வார்டுகளில் பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இந்த பூத்கமிட்டி உறுப்பி னர்கள் மற்றும் நிர்வாகி களுக்கான ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது. பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு ஆலங்குளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கே.பி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே. சண்முக சுந்தரம், தென்காசி தெற்கு மாவட்ட துணை செயலாளர் பசுவதி, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் இருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பூத் கமிட்டி பணிகள்
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் களப்பணிகள், வாக்காளர்களை சந்தித்தல் உள்ளிட்ட பூத்கமிட்டியின் பணிகள் குறித்து விளக்கி பேசினார்.
ஆலங்குளம் பேரூராட்சி 13- வது வார்டு, 14-வது வார்டு, 15-வது வார்டு மற்றும் சந்தனமாரியம்மன் கோவில் திடல், நத்தம் மாரியம்மன் கோவில் திடல், நாடார் திருமண மண்டபம், அண்ணாநகர், பரும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்ற பூத்கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலங்குளம் நகர துணைசெயலாளர் சால மோன்ராஜா, பேரூராட்சி துணை தலைவர் ஜான்ரவி, கவுன்சிலர் அன்னத்தாய் சொரிமுத்து, தகவல் தொழில்நுட்பம் நிக்சன் சத்தியராஜ், சிறுபான்மை பிரிவு ஐசக்சேகர், முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் தமிழரசன், ஜெயலலிதா பேரவை தனபால், விவசாய அணி தங்கசாமி மாரியப்பன், நகர இணை செயலாளர் நடராஜன், சுமோ சூரியன், இளைஞரணி கேபி குமரன் தேவதாஸ் சுரேந்திரன். சொரிமுத்து சொக்கலிங்கம்.செந்தில் தீப்பொறி பெரிய பாண்டியன், 11-வது வார்டு தங்கராஜ் தேவதாஸ், நகர மகளிர் அணி முத்து லெட்சுமி, விஜி வனிதா வசந்தி உள்பட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
- கழிவுநீர் அனைத்தும் அங்கன்வாடி அருகே தேக்கும் வகையில் கட்டமைப்பு பணி நடைபெறுகிறது.
தென்காசி:
ஆலங்குளம் அருகே உள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்பு நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி கேயன் என்பவரது மகன் திருமாறன். (வயது3). தனது தாயுடன் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த திருமாறன் கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை வழங்கி னான். அதில் கூறியிருப்பதாவது:-
குத்தப்பாஞ்சான் ஊராட்சி, பரும்புநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஆரம்ப கல்வி பயின்று வருகிறேன். இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர். எங்கள் பரும்பு நகர் பகுதியில் பரும்புநகர் மெயின் ரோடு வாறுகால் அமைக்கும் பணி நடைபெறு கிறது. இந்த வாறுகால் வழியாக கிராமத்தில் உள்ள கழிவுநீர் அனைத்தும் அங்கன்வாடி அருகே தேக்கும் வகையில் கட்டமைப்பு பணி நடைபெறுகிறது. கழிவுநீர் தேக்குவதால் அங்கு துர்நாற்றம் வீச கூடும். கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உருவாகும் இதனால் அங்கன்வாடியில் பயிலும் இளம் குழந்தைகளுக்கு தொற்று நோய் மற்றும் உயிர்கொல்லி நோய் வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எனவே குழந்தை களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் அமைக்கும் வறுகால் பணியினை தடைசெய்து மாற்றுமுறையில் வேறு இடத்தில் கழிவு நீர் செல்லும் வகையில் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- பனை விதைகள் விதைப்பு பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகைராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி ஊராட்சியில் அனந்தபத்மநாயக்கன் குளக்கரையில், தளிர் திப்பணம்பட்டி கிராமம் அமைப்பு சார்பில் 1,500 பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். ஊராட்சி வார்டு உறுப்பினர் தமிழ்ச் செல்வி, ஊராட்சி செயலர் பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நிலக்கிழார் ரவிசுப்பிரமணியன், முத்துராமன், வெங்கடாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகைராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடு களை தளிர் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் சதீஷ்குமார், அனீத் ஆகியோர் செய்திருந்தனர்.
- சிவகிரியில் 24 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடைபெற்றது.
- ராஜா எம்.எல்.ஏ., சீனிவாசன், டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முகாமினை பார்வையிட்டனர்.
சிவகிரி:
சிவகிரியில் 24 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், இரட்டை பதிவுகள் நீக்குதல், பெயர் திருத்தம் முகாம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது முனியாண்டி, கார்த்திக், நல்லசிவம், 24 பூத் முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீ சாய் கிருஷ்ணன் 3-ம் இடம் பிடித்தார்.
- மாணவி செரினா சோபி பட்டர்பிளை 50 மீட்டர், 100மீட்டர், 200 மீட்டரில் முதலிடம் பிடித்தார்.
தென்காசி:
தென்காசி அச்சம்பட்டியில் எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஜீடோ போட்டி நடைபெற்றது.
இதில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீ சாய் கிருஷ்ணன் 3-ம் இடமும், 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஜேக்கப் ஜாய் குமார் 2-ம் இடமும், ஜெபின் 3-ம் இடமும் பெற்றனர். அதேபோன்று தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான நீச்சல் போட்டி குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவி செரினா சோபி பட்டர்பிளை 50 மீட்டர், 100மீட்டர், 200 மீட்டரில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ரெ.ஜே.வே.பெல், செயலாளர் கஸ்தூரி பெல்,முதல்வர் டாக்டர் அலெக்சாண்டர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
- ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 41-வது விளையாட்டு விழா நடைபெற்றது.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.எஸ்.பி. பர்ணபாஸ், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 41-வது விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, பள்ளித் தாளாளர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். கலை நிகழ்ச்சிகள், கராத்தே, டேக்வாண்டோ, சிலம்பாட்டம், மனித பிரமீடு ஆகியவற்றை மாணவர்கள் நிகழ்த்தினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலங்குளம் டி.எஸ்.பி. பர்ணபாஸ், ராஜபாளையம் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- லீனா குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லீனா தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாப்பேரி குமாரசாமி நாடார் தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி லீனா (வயது 50). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். லீனா குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லீனா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தாட்கோ வணிக வளாக கட்டிடத்தை இடிக்க வேண்டும் என சுரண்டை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது.
- சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூட்டுறவு பண்டகசாலை பொருட்கள் பாதுகாப்பு குடோன் கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சிக் குட்பட்ட சங்கரன்கோவில் ரோட்டில் அமைந்துள்ள தாட்கோ வணிக வளாகம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாடு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பொது மக்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படும் முன் அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் தாட்கோ வணிக வளாக கட்டிடத்தை இடிக்க வேண்டும் என சுரண்டை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து சுரண்டைக்கு வந்த தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளர் ஜெயபாலன், தனுஷ் குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., சுரண்டை சேர்மன் வள்ளிமுருகன், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் (பொறுப்பு) ஆகியோர் தாட்கோ வணிக வளாக கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பங்களா சுரண்டை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூட்டுறவு பண்டகசாலை பொருட்கள் பாதுகாப்பு குடோன் கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது சுரண்டை நகராட்சி பொறி யாளர் முகைதீன், பணி மேற்பார்வையாளர் வினோத் கண்ணன், கவுன்சிலர் வேல்முத்து, மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், சுரண்டை நகர தி.மு.க. அவைத்தலைவர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன், சுரண்டை வார்டு செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், மாணவர் அணி ரமேஷ், சுந்தரபாண்டியபுரம் பேரூர் முன்னாள் செய லாளர் மாரியப்பன், டான் கணேசன், ராஜன் மற்றும் ஏராளமான தி.மு.க., காங்கி ரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- கீழப்பாவூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
ஆலங்குளம் தொகுதி கீழப்பாவூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் முன்னாள் எம்.பி.யும், அமைப்புச் செயலாளருமான அன்வர்ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன் தாஸ்பாண்டியன் , முன்னாள் எம்.பி.யும், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், பேரூர் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை, ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ்,இருளப்பன், காளிமுத்து, விவேகானந்தர், கவுன்சிலர் பவானி, மகளிர் அணி செயலாளர்கள் விஜய ராணி, இசக்கியம்மாள், பூத் பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
- 36 கிராம சேனைத்தலைவர் பள்ளியில் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்குதல் முகாம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான தங்கவேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் 36 கிராம சேனைத்தலைவர் பள்ளியில் பூத் எண் 16-ல் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்குதல் முகாம் நடைபெற்றது. அதனை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
அப்போது சங்கரன்கோவில் நகர பூத் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான தங்கவேலு, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், வார்டு செயலாளர் கோமதிநாயகம், பூத் பொறுப்பாளர்கள் சங்கரமகாலிங்கம், மாரியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.