என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
2023 கியா செல்டோஸ் இந்தியாவில் அறிமுகம்!
- கியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய செல்டோஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய கியா செல்டோஸ் மாடலின் விலை அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் 2023 செல்டோஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 கியா செல்டோஸ் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 65 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. புதிய மாடல்களின் என்ஜின்கள் RDE மற்றும் E20 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. கடுமையான புகை விதிகள் காரணமாக செல்டோஸ் மாடலில் வழங்கப்பட்டு வந்த 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் நீக்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர புதிய செல்டோஸ் மாடலில் 1.5 லிட்டர் NA நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இவற்றில் பெட்ரோல் என்ஜின் 115 பிஎஸ் பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 116 பிஎஸ் பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
வரும் மாதங்களில் இந்த காரில் முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 160 பிஎஸ் பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும். இந்த என்ஜின் ஏற்கனவே கியா கரென்ஸ் மற்றும் ஹூண்டாய் அல்கசார் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்:
2023 கியா செல்டோஸ் HTE 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 12 லட்சத்து 39 ஆயிரம்
2023 கியா செல்டோஸ் HTK 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 13 லட்சத்து 69 ஆயிரம்
2023 கியா செல்டோஸ் HTK+ 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 15 லட்சத்து 2 ஆயிரம்
2023 கியா செல்டோஸ் HTX 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 16 லட்சத்து 59 ஆயிரம்
2023 கியா செல்டோஸ் HTX+ 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 17 லட்சத்து 59 ஆயிரம்
2023 கியா செல்டோஸ் HTX 1.5 லிட்டர் டீசல் AT ரூ. 17 லட்சத்து 59 ஆயிரம்
2023 கியா செல்டோஸ் GTX+ 1.5 லிட்டர் டீசல் AT ரூ. 19 லட்சத்து 35 ஆயிரம்
2023 கியா செல்டோஸ் X லைன் 1.5 லிட்டர் டீசல் AT ரூ. 19 லட்சத்து 65 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.