search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    700 கிமீ ரேன்ஜ் வழங்கும் ஃபிஸ்கர் பியர் EV - அசத்தல் டீசர் வெளியீடு!
    X

    700 கிமீ ரேன்ஜ் வழங்கும் ஃபிஸ்கர் பியர் EV - அசத்தல் டீசர் வெளியீடு!

    • ஃபிஸ்கர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
    • ஃபிஸ்கர் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் பியர் என அழைக்கப்படுகிறது.

    ஃபிஸ்கர் நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கும் பியர் எலெக்ட்ரிக் கார், அதற்கான அனுமதிகளை பெறும் கட்டத்தில் உள்ளது. இதன் விலை 29 ஆயிரத்து 999, இந்திய மதிப்பில் ரூ. 24.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய ஃபிஸ்கர் பியர் மாடல் காம்பேக்ட் கிராஸ்ஒவர் என்றும் இதன் ஸ்டைலிங் கடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஒரே மாதிரியான ஹெட்லேம்ப், ஃபிளாட் ரூஃப், வீல் ஆர்ச்கள், பின்புறத்தில் ஹை மவுண்ட் செய்யப்பட்ட டெயில் லேம்ப்கள், பிரத்யேகமாக காட்சியளிக்கும் ரியர் விண்ட்ஸ்கிரீன் உள்ளது.

    காரின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இள்லை. புதிய பியர் மாடலின் விசேஷ வடிவம் பல்வேறு ஏரோடைனமிக் டெஸ்டிங்கை எதிர்கொண்டிருக்கிறது. இதன் E/E ஆர்கிடெக்ச்சர், எலெக்ட்ரிக் நிர்வாகத்திற்கு பிளேடு கம்ப்யுட்டர் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள பேட்டரிகள் அமெரிக்க டெஸ்ட் சைக்கிளில் 450 கிமீ ரேன்ஜ், ஐரோப்பிய டெஸ்ட் சைக்கிளில் 700 கிமீ ரேன்ஜ் வழங்கி அசத்தி உள்ளன. ஃபிஸ்கர் பியர் எலெக்ட்ரிக் காரின் டெஸ்டிங் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதன் சர்வதேச வெளியீடு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×