என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
9 லட்சம் கார்களை ரிகால் செய்யும் ஜெனரல் மோட்டார்ஸ் - ஏன் தெரியுமா?
- இந்த குறைபாடு பலத்த காயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் கொண்டது.
- ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது விற்பனை மையங்களுக்கு ரிகால் பற்றிய அறிவிப்பை வழங்கியது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகளின் உயிரை பறிக்கச் செய்யும் ஏர் பேக் கோளாறு காரணமாக சுமார் பத்து லட்சம் எஸ்யுவி-க்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இதில் 2014 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட புய்க் என்க்லேவ், செவர்லட் டிராவெர்ஸ் மற்றும் ஜிஎம்சி அகாடியா போன்ற மாடல்கள் அடங்கும்.
பாதிக்கப்பட்ட கார்களில் உள்ள ஏர்பேக்-ஐ செயல்பாட்டுக்கு வரச் செய்யும் உபகரணம் வெடிக்கும் அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வெடிக்கும் பட்சத்தில் கூர்மையான மெட்டல் பாகங்கள் கேபினுள் வீசப்படும். இது பலத்த காயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
2017 செவரலட் டிராவெர்ஸ் மாடல் விபத்தில் சிக்கும் போது ஏர்பேக் சரியாக வேலை செய்யவில்லை. இதை தொடர்ந்து தான், இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது. மே 10, 2023 அன்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது விற்பனை மையங்களுக்கு ரிகால் பற்றிய அறிவிப்பை வழங்கி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாத வாக்கில் அதுபற்றிய அறிவிப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. தங்களது கார் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பயனர்கள் NHTSA ரிகால்ஸ் வலைதளம் சென்று பார்க்கலாம்.