search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    3 ஆயிரம் கிமீ ரேன்ஜ் - இந்தியாவின் முதல் சூரியசக்தி எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
    X

    3 ஆயிரம் கிமீ ரேன்ஜ் - இந்தியாவின் முதல் சூரியசக்தி எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

    • இந்தியாவின் முதல் சூரியசக்தி எலெக்ட்ரிக் காரில் 150 வாட் சூரியசக்தி பேனல்கள் உள்ளன.
    • இந்த கார் மணிக்கு 250 கிமீ ரேன்ஜ், மணிக்கு அதிகபட்சம் 70 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    பூனேவை சேர்ந்த வேவ் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவின் முதல் சூரியசக்தி எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. வேவ் நிறுவனத்தின் சூரியசக்தி எலெக்ட்ரிக் கார் இவா எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரின் வினியோகம் அடுத்த ஆண்டு துவங்குகிறது. வேவ் இவா சூரியசக்தி எலெக்ட்ரிக் கார் மாடலில் பெரியவர்கள் இருவரும், சிறுவர் ஒருவரும் பயணம் செய்ய முடியும்.

    வேவ் இவா மாடல் ரூஃப் மீது சோலார் பேனல்களை கொண்ட இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதில் உள்ள 150 வாட் பேனல்கள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது. இது ஆண்டுக்கு 3 ஆயிரம் கிலோமீட்டர்கள் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரில் 14 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் ரை செல்லும்.

    இதில் உள்ள பேட்டரியை வீடுகளில் உள்ள சாக்கெட் சார்ஜர் மூலம் நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். இந்த காரின் டிசைன் வழிமுறைகள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் காரின் எடை 550 கிலோவாக உள்ளது. மேலும் இதில் உள்ள சோலார் பேனல்கள் காரை இயக்குவதற்கான சக்தியை வழங்குகிறது.

    இந்தியாவில் ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் சராசரியாக 30 கிலோமீட்டர் வரை பயணம் செய்கின்றனர். அந்த வகையில், வேவ் இவோ மாடல் 30 சதவீத டிரைவிங் ரேன்ஜ்-ஐ சூரியசக்தி மூலமாகவே வழங்கிவிடும். வேவ் விவா மாடல் மைக்ரோ கார் ஆகும். இது தோற்றத்தில் வழக்கமான கார்களை விட வித்தியாசமாக இருக்கிறது.

    வேவ் இவா மாடலில் உள்ள 6 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சம் 12 கிலோவாட் அல்லது 16 ஹெச்பி பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 14 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    Next Story
    ×