search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    கார் முழுக்க மாட்டு சாணம் பூசிய நபர் - ஏன் தெரியுமா?
    X

    கார் முழுக்க மாட்டு சாணம் பூசிய நபர் - ஏன் தெரியுமா?

    • மாருதி ஆல்டோ 800 மாடலை ஓமியோபதி மருத்துவரான சுஷில் சாகர் பயன்படுத்தி வருகிறார்.
    • பல சமயங்களில் மக்கள் தங்களின் கார் முழுக்க மாட்டு சாணம் பூசிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

    மாருதி சுசுகி ஆல்டோ 800 மாடல் முழுக்க மாட்டு சாணம் பூசப்பட்ட நிலையில் இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய பிரதேச மாநில சாலைகளில் வலம்வரும் இந்த மாருதி ஆல்டோ 800 மாடலை ஓமியோபதி மருத்துவரான சுஷில் சாகர் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இவர் கார் முழுக்க மாட்டு சாணத்தை பூசியிருக்கிறார்.

    ஏற்கனவே இதேபோன்று பல சமயங்களில் மக்கள் தங்களின் கார் முழுக்க மாட்டு சாணம் பூசிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. முன்னதாக கடந்த ஆண்டு கோடை காலத்தில் மாருதி ஆம்னி காரில் அதன் உரிமையாளர் மாட்டு சாணம் பூசினார். இதுதவிர 2019 மே மாத வாக்கில் டொயோட்டா கொரோல்லா மாடலில் இதே போன்ற செயலை அதன் உரிமையாளர் செய்தார்.

    காரின் மின்விளக்குகள், பம்ப்பர் மற்றும் நம்பர் பிலேட் தவிர இதர பகுதிகள் முழுக்க மாட்டு சாணம் பூசப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. உண்மையில் காரில் மாட்டு சாணம் பூசினால், இண்டீரியர் குளிர்ச்சியாக இருக்குமா?

    மாட்டு சாணம் ஈரமாக இருக்கும் போது, காரின் உள்புறத்தில் ஓரளவுக்கு வெப்பம் குறையலாம். ஆனால், அடிக்கும் வெயிலுக்கு மாட்டு சாணம் எளிதில் காய்ந்து விடும். இவ்வாறு மாட்டும் சாணம் காய்ந்த நிலையில் இருக்கும் போது, கார் என்ஜின் வழக்கத்தைவிட அதிக சூடாகும் வாய்ப்புகள் உண்டு. மேலும் இது காரின் பெயிண்ட்-ஐ சேதப்படுத்திவிடும்.

    Next Story
    ×