search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ஏற்றுமதியில் புதிய மைல்கல் எட்டி அசத்திய மாருதி சுசுகி!
    X

    ஏற்றுமதியில் புதிய மைல்கல் எட்டி அசத்திய மாருதி சுசுகி!

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இருந்து சுமார் 100 நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்கிறது.
    • இந்தியாவில் இருந்து அதிக வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுசுகி உள்ளது.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் உலகம் முழுக்க சுமார் 25 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து புதிய மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறது. மாருதி சுசுகி நிறுவனம் 1986 முதல் 87 முதல் இந்தியாவில் இருந்து வாகனங்களை ஏற்றுமதி செய்ய துவங்கியது. முதற்கட்டமாக வங்கதேசம் மற்றும் நேபால் நாடுகளுக்கு மாருதி கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    அதன்படி 1987 வாக்கில் ஹங்கேரி நாட்டுக்கு 500 கார்களை முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது மாருதி சுசுகி நிறுவனம் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகள் உள்பட உலகின் சுமார் 100 நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் கிரண்ட் விட்டாரா மாடலை லத்தீன் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது.

    புதிய மைல்கல் எட்டியது பற்றி மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹிசாஷி டக்யுச்சி கூறியதாவது..

    "ஏற்றுமதியில் 25 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல் இந்திய உற்பத்தி திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது. மத்திய அரசின் மேக்-இன்-இந்தியா திட்டம் மற்றும் வாகன ஏற்றுமதி உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க மாருதி சுசுகி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துரைக்கிறது. எங்களின் தாய் நிறுவனம் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் தொடர் ஆதரவு இன்றி இது சாத்தியமாகி இருக்காது."

    "தலைசிறந்த தொழில்நுட்ப உதவி வழங்கியதோடு, சர்வதேச நெட்வொர்க் மூலம் இந்த மைல்கல்லை நாங்கள் அடைய சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் உதவியுள்ளது. இந்த மைல்கல்லை எட்டுவதற்கு எங்களது குழுக்களின் அயராத முயற்சி மற்றும் கடின உழைப்பும் மிக முக்கிய காரணம் ஆகும். எங்களின் சர்வதேச வாடிக்கையாளர்கள் மற்றும் சர்வதேச வினியோகஸ்தர்கள் எங்களுக்கு வழங்கிய ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு எங்களது நன்றிகள்."

    Next Story
    ×