என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா - வினியோக விவரம்!
- ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வருகின்றன.
- புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடல் முன்பதிவு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதிய கார் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த காரின் உற்பத்தி சென்னையில் உள்ள ஹூண்டாய் ஆலையில் துவங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் மார்ச் 21 ஆம் தேதி புதிய ஹூண்டாய் வெர்னா விலை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இதே நாளில் இந்த காரின் சர்வதேச வெளியீடு நடைபெற இருக்கிறது. இந்தியாவில் சில விற்பனையாளர்கள் ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு மற்றும் வினியோக விவரங்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாத துவக்கத்தில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. புதிய மாடல் அறிமுகமாவதை ஒட்டி, ஏற்கனவே தற்போதைய வெர்னா மாடலை முன்பதிவு செய்தவர்கள் புதிய மாடல் வாங்க முன்பதிவை மாற்றி உள்ளனர்.
விலை விவரங்கள் மார்ச் 21 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதிய வெர்னா மாடலின் வினியோகம் ஒவ்வொரு வேரியண்ட் மற்றும் பகுதிக்கு ஏற்ப ஏப்ரல் மாத மத்தியில் துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.