search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    அசத்தல் அப்டேட்களுடன் புதிய ஹூண்டாய் வெர்னா - டிசைன் டீசர்கள் வெளியீடு!
    X

    அசத்தல் அப்டேட்களுடன் புதிய ஹூண்டாய் வெர்னா - டிசைன் டீசர்கள் வெளியீடு!

    • ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா மாடலை நாளை அறிமுகம் செய்கிறது.
    • புதிய தலைமுறை வெர்னா மாடல் சர்வதேச வெளியீடு இந்தியாவில் நடைபெற இருக்கிறது.

    ஹூண்டாய மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆறாம் தலைமுறை வெர்னா மாடல் டிசைன் ரெண்டர்களை வெளியிட்டு உள்ளது. புதிய வெர்னா மாடலின் சர்வதேச வெளியீடு இந்தியாவில் நாளை (மார்ச் 21) நடைபெற இருக்கிறது. புதிய செடான் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

    டிசைன் ஸ்கெட்ச்களை வைத்து பார்க்கும் போது 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் பெரிய கிரில், ஆங்குலர் வி வடிவ இன்சர்ட்கள், எல்இடி டிஆர்எல்கள், பொனெட் முழுக்க எல்இடி லைட் பார், புதிய பம்ப்பரில் முக்கோண வடிவம் கொண்ட இன்சர்ட்கள் உள்ளன.

    இத்துடன் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், சி பில்லரில் க்ரோம் இன்சர்ட், பூட்-லிப் ஸ்பாயிலர், இன்வர்டெட் எல் வடிவ எல்இடி டெயில் லைட்கள், டூயல் டோன் ரியர் பம்ப்பர் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் நான்கு வேரியண்ட்கள், ஒன்பது வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது. புதிய வெர்னா மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

    "முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா மாடலின் டிசைன் ரெண்டர்களை வெளியிடுவதில் இன்று, நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எதிர்கால மற்றும் முரட்டுத்தனமான செடான் மாடலை அறிமுகம் செய்வதன் மூலம், நாங்கள் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி, இந்த பிரிவை வாடிக்கையாளர்கள் விரும்ப செய்ய நினைக்கிறோம்."

    "அசத்தலான அளவீடுகள் மற்றும் பாராமெட்ரிக் மொடிஃப்களின் மூலம் முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் எதிர்கால அனுபவங்களுக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கும்," என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அன்சூ கிம் தெரிவித்தார்.

    Next Story
    ×