என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
கார்களின் விலையை அதிரடியாக மாற்றும் டாடா மோட்டார்ஸ்
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
- விலை மாற்றத்தில் இந்த முறை எலெக்ட்ரிக் வாகனங்கள் பாதிக்கப்படாது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது IC என்ஜின் கொண்ட பயணிகள் வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1 ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப 1.25 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட இருக்கிறது.
"ஒழுங்குமுறை மாற்ங்கள் மற்றும் ஒட்டுமொத்த செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் பிரச்சினையில் எதிர்கொள்ளும் நோக்கில் விலை உயர்வை அறிவிக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்- டாடா நெக்சான், டாடா சஃபாரி, டாடா பன்ச், டாடா டியாகோ, டாடா டிகோர், டாடா அல்ட்ரோஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற மாடல்களை IC என்ஜின் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் டாடா நெக்சான் EV சீரிஸ் விலையை டாடா மோட்டார்ஸ் மாற்றியமைத்தது.
அதின்படி டாடா நெக்சான் EV மாடலின் விலை ரூ. 31 ஆயிரமும், டாடா நெக்சான் மேக்ஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 85 ஆயிரம் வரை குறைக்கப்பட்டது. இதுதவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு புது கார் மற்றும் கான்செப்ட் மாடல்களை காட்சிக்கு வைத்தது.
இதில் கர்வ் மற்றும் சியெரா EV மாடல்கள் ப்ரோடக்ஷன் நிலையை எட்டியுள்ளன. இத்துடன் டாடா அல்ட்ரோஸ் CNG மற்றும் டாடா பன்ச் CNG மாடல்கள் டுவின்-சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.