search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ப்ளிப்கார்ட்-இல் விற்பனைக்கு கிடைக்கும் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
    X

    ப்ளிப்கார்ட்-இல் விற்பனைக்கு கிடைக்கும் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய விடா V1 மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 165 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. விரைவில் விடா V1 இ ஸ்கூட்டர் முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. சென்னை அஞ்சல் குறியீட்டிற்கு விடா V1 மாடலை ப்ளிப்கார்ட் தளத்தில் தேடும் போது தற்போதைக்கு வினியோகம் செய்யப்படாது என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளஸ் மற்றும் ப்ரோ என்று இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 3.44 கிலோவாட் ஹவர் மற்றும் 3.94 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை முறையே 143 கிலோமீட்டர் மற்றும் 165 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.

    புதிய விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கழற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் இரண்டு வேரியண்ட்களில் ப்ரோ வேரியண்ட் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதோடு, நீண்ட ரேஞ்ச், சிறப்பான அக்செல்லரேஷன் மற்றும் அதிக நிற ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

    விடா V1 பிளஸ் மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும், ப்ரோ மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளிலும் எட்டிவிடுகிறது. ஹீரோ நிறுவனத்தின் விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒலா S1 ப்ரோ, ஏத்தர் 450X, பஜாஜ் செட்டக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    இது மட்டுமின்றி விடா V1 ஸ்கூட்டருக்கு போட்டியாக உள்ள எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் கழற்றக்கூடிய பேட்டரி வசதியோ, இவற்றின் விற்பனை ஆன்லைன் விற்பனை தளங்களிலோ நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×