search icon
என் மலர்tooltip icon

    பைக்

    2023 ஹோண்டா ஹைனெஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!
    X

    2023 ஹோண்டா ஹைனெஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!

    • ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய CB350 மற்றும் CB350RS மாடல்களை அறிமுகம் செய்தது.
    • புதிய மாடல்களில் OBD-2 B சிஸ்டம் மற்றும் ஸ்ப்லிட் ரக சீட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஹோண்டா நிறுவனம் 2023 ஹைனெஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடல்களில் புதிய மாற்றங்கள் மட்டுமின்றி ஹோண்டா நிறுவனம் கஸ்டம் கிட்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை நாடு முழுக்க செயல்பட்டு வரும் ஹோண்டா பிக்விங் விற்பனை மையங்களில் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வர உள்ளன.

    2023 ஹோண்டா ஹைனெஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களில் OBD-2 B சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் எமர்ஜன்ஜி ஸ்டாப் சிக்னல் (ESS) வழங்கப்பட்டு இருக்கிறது. இது ரைடர் திடீரென பிரேக்குகளை அழுத்தும் போது இண்டிகேட்டர்களை ஆன் செய்து எச்சரிக்கை விடுக்கிறது. CB350RS மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 2023 ஹைனெஸ் மாடல்களில் புதிய ஸ்ப்லிட் ரக சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை இதுவரை இல்லாத அளவுக்கு சவுகரியத்தை வழங்குகிறது. இந்த மாற்றங்கள் மட்டுமின்றி 2023 ஹைனெஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களின் விலையும் ரூ. 11 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    2023 ஹோண்டா ஹைனெஸ் விலை விவரங்கள்:

    ஹைனெஸ் DLX ரூ. 2 லட்சத்து 09 ஆயிரத்து 857

    ஹைனெஸ் DLX ப்ரோ ரூ. 2 லட்சத்து 12 ஆயிரத்து 856

    ஹைனெஸ் DLX ப்ரோ க்ரோம் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 856

    ஹைனெஸ் DLX ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 856

    ஹைனெஸ் DLX ப்ரோ ரூ. 2 லட்சத்து 17 ஆயிரத்து 857

    ஹைனெஸ் DLX டூயல் டோன் ரூ. 2 லட்சத்து 17 ஆயிரத்து 857

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2023 ஹோண்டா ஹைனெஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களில் 348.6சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.78 ஹெச்பி பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சஸ்பென்ஷனிற்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள் உள்ளன. பிரேக்கிங்கிற்கு இருபுறமும் ஒற்றை டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்களில் எல்இடி லைட்டிங் சிஸ்டம், ஹசார்ட் லேம்ப்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×