என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
பைக்
![விலை ரூ. 16.90 லட்சம் தான் - 2023 சுசுகி ஹயபுசா இந்தியாவில் அறிமுகம் விலை ரூ. 16.90 லட்சம் தான் - 2023 சுசுகி ஹயபுசா இந்தியாவில் அறிமுகம்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/08/1862474-2023-suzuki-hayabusa.webp)
விலை ரூ. 16.90 லட்சம் தான் - 2023 சுசுகி ஹயபுசா இந்தியாவில் அறிமுகம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சுசுகி நிறுவனத்தின் 2023 ஹயுசா சூப்பர்பைக் மாடல் புதிய நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- புதிய மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் 2023 ஹயபுசா சூப்பர்பைக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய 2023 ஹயபுசா மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 49 ஆயிரம் வரை அதிகம் ஆகும். புதிய மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
சர்வதேச மாடலில் உள்ளதை போன்ற அப்டேட்களே அதன் இந்திய வேரியண்டிலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இவை புதிய நிற ஆப்ஷன்கள் வடிவில் வழங்கப்பட்டுள்ளன. 2023 சுசுகி ஹயபுசா மாடல் ஸ்டிரைகிங் மெட்டாலிக் கிரே மற்றும் கேண்டி ரெட் ஹைலைட்களை கொண்டுள்ளது. இதே போன்ற அக்செண்ட்கள் வைகர் புளூ நிறத்திலும் வழங்கப்படுகிறது. இதன் முதன்மை நிறம் பியல் வைட் ஆகும்.
இதுதவிர 2023 சுசுகி ஹயபுசா மாடல் ஃபுல் பிளாக் நிற ஆப்ஷனிலும் வழங்கப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கிரே நிற எழுத்துக்கள், பக்கவாட்டில் க்ரோம் ஸ்டிரைப் உள்ளது. புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலிலும் 1340சிசி, இன்லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 190 ஹெச்பி பவர், 142 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இவற்றுடன் இதர எலெக்ட்ரிக் அம்சங்கள், பிரேகிங் மற்றும் சஸ்பென்ஷன் ஹார்டுவேர் உள்ளிட்ட அம்சங்களிலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.