search icon
என் மலர்tooltip icon

    பைக்

    KTM 390 அட்வெஞ்சர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்
    X

    KTM 390 அட்வெஞ்சர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்

    • கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக்கின் விலை ரூ. 3.68 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • கேடிஎம் 390 அட்வெஞ்சர் எக்ஸ் பைக்கின் விலை ரூ.2.91 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    KTM நிறுவனம் 390 Adventure மற்றும் Adventure X பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    கேடிஎம் 390 அட்வெஞ்சர் எக்ஸ் மற்றும் 390 அட்வெஞ்சர் ஆகியவை ஒரே 373சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சினைக் கொண்டுள்ளன. இது 6-ஸ்பீடு கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை முறையே 42.31 ஹெச்.பி. பவரையும் 37 என்.எம். டார்க் விசையையும் வெளிப்படுத்தும். இரண்டு பைக்குகளும் 32.7 kmpl மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக்கின் விலை ரூ. 3.68 லட்சமாகவும் கேடிஎம் 390 அட்வெஞ்சர் எக்ஸ் பைக்கின் விலை ரூ.2.91 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×