என் மலர்
பைக்
ஹீரோ நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் - காப்புரிமையில் லீக் ஆன தகவல்கள்!
- ஹீரோ நிறுவனம் மேக்சி ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது.
- ஜூம் 110 மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை மாற்றியமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்டிரீம் 160R 4V மாடலை அறிமுகம் செய்து இருந்தது.
இந்த மாலில் ஆயில் கூலிங், யுஎஸ்டி ஃபோர்க்குகள், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் புதிய எக்ஸ்டிரீம் 160R 4V மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 300 என்று துவங்குகிறது.
இதைத் தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரிஸ்மா ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், ஹீரோ நிறுவனம் மேக்சி ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது. அதன்படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முற்றிலும் புதிய மேக்சி ஸ்கூட்டரை காப்புரிமை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதவிர புதிய மேக்சி ஸ்கூட்டர் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது வரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் ஃபிளாக்ஷிப் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர ஜூம் 110 மாடலையும் ஹீரோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் ஹீரோ நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக உருவெடுத்து இருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் காப்புரிமை படங்களின் படி, ஹீரோவின் மேக்சி ஸ்கூட்டர் முற்றிலும் புதிய ஸ்விங் ஆர்ம் பொருத்தப்பட்ட சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்விங் ஆர்மில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் இடம்பெற்று இருக்கிறது. இந்த மாடலில் அதிகபட்சம் 163சிசி என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது.
Photo Courtesy: Rushlane